Friday 22 June 2012

அஜீத், விஜய், சிம்பு, ஆர்யா... எல்லாருக்கும் நான் நண்பன்! கார்த்தியின் அசத்தல் பேட்டி


ரசியலைப் பத்தி ஒரு கமென்ட் வந்தாலே திணறிப்போயிடுறோம்... நீங்க ஃபுல் லெங்த் அரசியல் சினிமாவே எடுத்திருக்கீங்களே... செம தில்லுதான்’னு இண்டஸ்ட்ரி நண்பர்கள் சொல்றாங்க. இப்போதைய அரசியலுக்கும் படத்துக் கும் துளிகூடச் சம்பந்தம் இல்லை. இந்தப் படத்துக் குனு ஒரு கற்பனை அரசியல் சூழலை உருவாக்கி, அதுலதான் ஜாலி பண்ணியிருக்கோம். 'சிறுத்தை’யை எப்படி லாஜிக் பார்க்காம ரசிச்சீங்களோ... அப்படியே 'சகுனி’யையும் சந்தோஷமா என்ஜாய் பண்ணுங்க'' - குறும்பாகச் சிரிக்கிறார் 'சகுனி’ கார்த்தி.
 '' 'பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன்’னு வித்தியாசம் காட்டிட்டு இருந்தீங்க. இப்ப 'சகுனி, அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா’னு கமர்ஷியல் சக்கரம் மட்டும் சுத்துறீங்களே...''
''பெர்ஃபார்மன்ஸுக்காக மட்டுமே இப்பப் படம் எடுக்க முடியாது. பெர்ஃபார்மன்ஸ்ல கமர்ஷியல் காக்டெய் லும் இருக்கிற ஸ்க்ரிப்ட்டுக்காகக் காத்திருந்தா... காத்துட்டே இருக்க வேண்டியதுதான்.ஏற்கெனவே அப்படி நாலு வருஷம் காத்திருந் தேன். அவ்வளவு நேரம் செலவழிச்சுக் காத்திருக்கிறதுக்குப் பெரிய விலை இருக்கு. நல்ல டீம் வேணும், பிரமாத மான ஆர்ட்டிஸ்ட்டுகள் தேவை. 'பையா’வில் மட்டும்தான் நான் ஹீரோ. 'நான் மகான் அல்ல’ படத்தில் நான் மிடில் கிளாஸ் பையன். இது எல்லாத்தையும்விட முக்கியம்... இப்ப கடவுள் புண்ணியத்தில் நமக்கு பிசினஸ் நல்லாப் போயிட்டு இருக்கு. நம்ம படத்தை வாங்கி ரிலீஸ் பண்றவங்களுக்கு 'இவனை நம்பலாம்டா’னு நம்பிக்கை கொடுப்போம். அப்புறம் இன்னும் வித்தியாசமா செய்வோம்!''
''குழந்தைகளுக்கு உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கே... சமயங்களில் சூர்யாவைவிட நிறைய ஸ்கோர் பண்றீங்கபோல... எப்படி இது?''
''எனக்கே புரியலைங்க! ஏர்போர்ட் செக்கிங் ஆரம்பிச்சு ஃப்ளைட் சீட்ல உக்கார்ற வரைக்கும் குழந்தைகளை வாங்கி, தூக்கி, பேர் கேட்டு, 'நல்லாப் படிங்க’னு சொல்ல அவசியம் வந்திருக்கு. 'இதுக்கெல்லாம் நாம என்னடா பண்ணோம்?’னு யோசிச்சுப் பார்த்தால், ஒண்ணும் புரியலை. என் கண்ணு பெரிசா இருக்கு, வாய் பெரிசா இருக்குனு ஆச்சர்யமாப் பார்க்கிறாங் களா? இப்போலாம் டைரக்டர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாவே சீன்களை வைக்கச் சொல்றேன். நம்ம படங்களைக் குழந்தைங்கதானே ரொம்ப விரும்பிப் பார்க்குறாங்க!''
''மத்த ஹீரோக்களோட டச்ல இருக்கீங்களா?''
''ஆர்யா, 'ஜெயம்’ ரவி, ஜீவா எல்லாரும் அடிக்கடி பேசிப்போம். மாத்தி மாத்திப் படங்களைப் பத்தி கமென்ட் அடிச்சுக் கலாய்ச்சுப்போம். எங்க செட்ல அத்தனை பேரும் ஈஸியாப் பழகுறோம். சிம்பு எங்கே பார்த்தாலும் 'நல்லாப் பண்றீங்க’னு சொல் லிப் பேசிட்டு இருப்பார். லயோலா காலேஜ்ல அண்ணனைப் பார்க்கப் போகும்போதே, விஜய் சாரைப் பார்ப்பேன். நிறையப் பேசுவார். அஜீத்தை ஏர்போர்ட்ல பார்த்தா, அப்பாவில் ஆரம்பிச்சு ஒருத்தர் விடாமல் விசாரிப்பார். என் படங்களைப் பத்தி உண்மையான கருத்துகளைச் சொல் வார். அவரோட இருக்கிற, பேசுற நேரம் ரொம்ப உண்மையா இருக்கும். இப்ப இருக்கிற யாரையும் நம்ப முடியாது. சான்ஸ் கிடைச்சா சட்டுனு பின்னியெடுத்து எங்கேயோ உயரமா முத்திரை பதிச்சிட்டுப் போயிடுறாங்க!''
''அப்படிப் பொதுவா சொன்னா எப்படி... உங்களுக்குத் தமிழ் சினிமாவில் பிடிச்ச நடிகர் யார்?''
''சந்தானம்தான்!
அவர் உழைப்பை நினைச்சா, ஆச்சர்யமா இருக்கு. நாமெல்லாம் ஒரு படத்தில் கவனம் செலுத்தி நடிச்சுட்டு ஏதோ பெரிசா வொர்க் பண்ணிட்டு இருக்கிறதா நினைக்கிறோம். ஆனா, சந்தானத்துக்கு எப்பப் பார்த்தாலும் ஆறேழு டைரக்டர்கள் கதை சொல்லக் காத்துட்டு இருக்காங்க. எல்லாத்தையும் எல்லாரையும் சமாளிக்கிறார். ஸ்பாட்ல நடிக்கும்போதே ஹ்யூமர் சரியா ஸ்பார்க் ஆகலைன்னா, 'ஒரு நிமிஷம்’னு உட்கார்ந்து யோசிக்கிறார். ஷூட் முடிஞ்சதும் ஆபீஸுக்குப் போய் உக்காந்து அடுத்த நாள் காமெடிக்கு விஷயம் தேடுறார். இத்தனைக் கும் ஃபேமிலி ஆள் வேற. அவர் அளவுக்கு கிரியேட்டிவா, எனி டைம் எனர்ஜியோட ஒருத்தரை நான் பார்க்கலை!''
''மிசஸ் கார்த்தி எப்படி இருக்காங்க?''
''குடும்பம் நடத்த இன்னொரு 24 மணி நேரம் இருந்தா டபுள் மடங்கு சந்தோஷமா இருக்கும். வீட்ல அவங்ககூட இருக்கிற நேரம் ரொம்ப குறைச்சல். அவுட்டோர் ஷூட்டிங்னா அழைச்சுட்டுப் போவேன். அங்கே வந்தும் ரூம்ல அடைஞ்சே இருக்கப் பிடிக்காது அவங்களுக்கு. ஷூட்டிங் பார்க்க வந்துட்டு 'இவ்வளவு கஷ்டமா?’னு வெறுத்துட்டாங்க. மூணு நிமிஷம் வர்ற சீனுக்கு மூணு நாள் ஷூட்டிங் நடத்துற கஷ்டத்தை எல்லாம் புரிஞ்சுக்கிட்டாங்க. வீட்டுக்கு ரொம்ப சோர்வா வந்தா, 'இன்னிக்கு ஃபைட் டா?’னு கேட்கிறாங்க. அவங்களுக்கு இந்த செல்போன்தான் பெரிய எதிரி. 'என்கூட இருக்கிற கொஞ்ச நேரத்துலயும் அதுல என்ன பேச்சு?’னு சண்டை போடுவாங்க. ஆனா, கிடைக்கிற எல்லா நேரத்திலும் அவங்ககூடதான் நான் இருக்கேன்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும்.''
''ஆரம்பத்துல கொஞ்சம் தமன்னாபத்தி வந்தது. அப்புறம் பெருசா கிசுகிசு இல்லை. என்ன விஷயம்?''
''வளர்ந்த விதம் அப்படி. 'சினிமாவில் எல்லாமே கேட்காமலேயே கிடைக்கும். நீதான் கவனமா இருந்துக்கணும்’னு அப்பா சொல்வார். நான் ரொம்ப லேட்டா 26 வயசில்தான் சினிமாவுக்கு வந்தேன். விலகிப் போயிட்டு விரும்பி வந்தேன். அமிதாப் பச்சனே சொல்லியிருக்கார்... 'உன் கடைசிப் படம்தான் உனக்கு விசிட்டிங் கார்டு’னு! அப்படி இருக்கும்போது மத்த விஷயங்களுக்கு இடம் இல்லை. 'சினிமாவில் இருக்கிறது புண்ணியம்டா. பொறுப்பா இருங்கடா’னு அப்பா சொல்வார். நான் பொறுப்பா இருக்கேன்!''

No comments:

Post a Comment