Thursday 21 June 2012

பெண் இயக்குனர் மீது சேது மாதவன் பொறாமை.



   பெண் இயக்குனருக்கு தயாரிப்பாளர் கிடைத்ததுபோல்
 எனக்கு கிடைக்கவில்லை. அவர் மீது பொறாமையாக
 இருக்கிறது என்றார் இயக்குனர் சேது மாதவன்.
 சரிதா தங்கை விஜி நடிக்கும் படம்
‘ஆரோகணம்Õ. லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்குகிறார்.
கே இசை அமைக்கிறார். இப்படத்தின் பாடல்
 கேசட்டை இயக்குனர்கள் கே.பாலசந்தர்,
 சேது மாதவன் வெளியிட்டனர்.

  பிறகு சேது மாதவன் பேசியதாவது: சில இயக்குனர்கள் திடீரென்று
பட பட்ஜெட் பற்றாக்குறையால் கஷ்டப்படுகிறார்கள்.
எந்த சப்ஜெக்ட் இயக்கப்போகிறோம் என்பதற்கும் 
பட்ஜெட்டுக்கும் சம்பந்தம் இருக்கிறது. போட்ட பட்ஜெட்டுக்குள் 
எப்படி படம் இயக்குவது என்பதை பழம் பெரும்
 தயாரிப்பாளர் கே.ஆர்.சுந்தரத்திடம் கற்றேன்.

 ஒரு படத்தை உருவாக்க திட்டமிடும்போதே அதற்கு 
பட்ஜெட்யையும் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். அப்போது 
பட்ஜெட் பிரச்னை இருக்காது. படம் செய்வது எளிதல்ல.
 ஆனால் நல்ல தயாரிப்பாளர்களால் நல்ல படத்தை நிச்சயம் 
தயாரிக்க முடியும். ‘ஆரோகணம்Õ படத்தை இயக்கிய 
லட்சுமி மீது எனக்கு பொறாமையாக இருக்கிறது.
 அவரது சப்ஜெட்டுக்கு ஏற்ப படம் தயாரிக்க 
தயாரிப்பாளர்கள் கிடைத்துள்ளனர்.

    அந்த காலத்தில் எனக்கு இதுபோல் தயாரிப்பாளர்கள் 
கிடைக்கவில்லை. ஒரு ஸ்கிரிப்ட் உருவாகினால் அதில்
ஆன்மா இருக்க வேண்டும். அப்போதுதான் அதனால் சுவாசிக்க
முடியும். இந்த இரண்டும் ஆரோகணம் படத்தில் இருக்கிறது.
இவ்வாறு சேது மாதவன் கூறினார்.
விழாவில் இயக்குனர்கள் வசந்த், பாண்டிராஜ், மிஷ்கின்
 உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment