Thursday 21 June 2012

நீதானே என் பொன்வசந்தம் படத்தின் இசை ஜூலையில் வெளியீடு.


கவுதம் மேனன் இயக்கத்தில், இளையராஜா இசையில் தயாராகும் நீதானே என் பொன்வசந்தம் படத்தின் ஆடியோ உரிமையை,சமீப காலங்களில் எந்த ஒரு படத்திற்கும் கொடுத்திராத வகையில், சோனி நிறுவனம் மிகப்பெரிய தொகையை கொடுத்து பெற்றுள்ளதாம். இது இதே கவுதம் மேனன் இயக்கி,ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வந்த விண்ணைத் தாண்டி வருவாயாவை விட அதிகம் என கூறப்படுகிறது. சமீபத்தில் எந்தப் பட இசைக்கும் தராத மிகப் பெரிய விலையை நீதானே என் பொன்வசந்தத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது.ஆர் எஸ் இன்போடெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், ஜீவா - சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீடு ஜூலை முதல் வாரத்தில் நடைபெறும் என தெரிகிறது.

No comments:

Post a Comment