Thursday 21 June 2012

லட்சுமி ராமகிருஷ்ணன் என் இரண்டாவது தாய்!-மிஷ்கின் ‌பேச்சு!

Lakshmi Ramakrishnan is my second mother says mysskin   பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் டைரக்டராக அவதரித்து இருக்கும் ஆரோகணம். இப்படத்தில் புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜி சந்திரசேகர், மாரிமுத்து, உமா, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனூப் இன்டர்நேஷனல் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. இதில் டைரக்டர்கள் பாலசந்தர், வசந்த், மிஸ்கின், நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இயக்குநர் சிகரம் பாலசந்தர் ஆடியோ சிடி.யை வெளியிட்டார்.

விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், "லட்சுமி ராமகிருஷ்ணன் தன் நடிப்பை, தொழிலை காதலிப்பவர். அவர் அளவுக்கு அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவரைப் பார்க்க முடியாது. நான் இயக்கிய யுத்தம் செய் படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் நதியா. ஆனால் தலையை மொட்டை அடிக்க வேண்டும் என்றதும், அவர் டூப் போட்டுக்கலாம் என்றார். நான் அவர் வேண்டாம் என்று வந்துவிட்டேன். அப்போது வேறு ஒரு சின்ன வேடத்துக்காக வந்திருந்த லட்சுமியிடம், மொட்டை போட்டுக் கொள்ள முடியுமா? என்று கேட்டபோது, கேரக்டருக்கு தேவை என்றால் போட்டுக் கொள்கிறேன் என்றார். கதை கேட்டார், மொட்டையும் போட்டார்.

ஒரு பெண் மொட்டை போடுவது சாதாரண விஷயமல்ல. அது சங்க காலங்களில் நடந்திருக்கலாம். ஆனால் நிஜத்தில் 30 -40 வருடங்கள் வளர்த்த கூந்தலை மழித்துக் கொள்ள யாரும் விரும்புவதில்லை. லட்சுமி இதைச் செய்த போது, அவரது காலைத் தொட்டுக் கும்பிட நினைத்தேன். அவரது இந்த முதல் முயற்சி பெரும் வெற்றி பெற, நான் இரண்டாவது தாயாகக் கருதும் அவரையே வேண்டிக் கொள்கிறேன்," என்றார்.

No comments:

Post a Comment