Friday 22 June 2012

மழையில் நின்ற நகுல் என்னாவொரு டெடிக்கேஷன்?


    
naan rajavaga pogiren
   சில டைட்டில்கள், பத்து பாட்டில் சலைன் பாட்டில்களை ஏற்றிய தெம்பை தரும். நகுலுக்கும் அப்படியொரு தெம்பை தருகிறது இந்த டைட்டில். 'நான் ராஜாவாக போகிறேன்'

பிருத்வி ராஜ்குமார் இயக்கிக் கொண்டிருக்கும் இப்படம் நகுலின் நைந்து போனமார்க்கெட்டை தூக்கி நிறுத்தக்கூடும். ஏனென்றால் இந்த பிருத்வி பிரபல இயக்குனர் வெற்றிமாறனின் வலது கையாகவும் இடது சுவாசமாகவும் இருந்தவர். பொல்லாதவன் வெற்றிக்கு பெரிய காரணமாக இருந்தவர் என்று ஒரு மேடையில் இந்த பிரித்வியை குறிப்பிட்டிருந்தார் வெற்றிமாறன். அதுமட்டுமல்ல, இந்த படத்திற்கு வசனத்தையும் எழுதி உதவியிருக்கிறார் வெற்றி. (சப்போர்ட் இதோடு நின்றபாடில்லை, ஒரு காட்சியில் நடித்தும் இருக்கிறாராம்)

முதல் படம் ஹிட்டானால் போதும், முழு கோடம்பாக்கமும் நம்ம பாக்கெட்டில்தான் என்று திணவெடுத்து திரிவார்கள் எல்லா ஹீரோக்களும். நம்ம நகுலும் அப்படி திரிந்தவர்தான். காலம் ஒரு மிகப்பெரிய டுடோரியல் இன்ஸ்ட்டியூட் அல்லவா? அது கற்றுக் கொடுத்த பாடத்தினால் கப்சிப் ஆகிவிட்ட நகுல், இப்படத்தில் காட்டிவரும் ஈடுபாடு எப்படி? பிருத்வி ராஜ்குமாரிடம் கேட்டால் நகுலின் படத்தை பிரேம் போட்டு மாட்டி சூடம் கொளுத்துவார் போலிருக்கிறது. அப்படியொரு பாராட்டுமழை.

போன வாரம் மூணு நாள் ஒரு ஃபைட் சீன் எடுத்தோம். கம்ப்ளீட் மழை செட்டப். அந்த மூணு நாளும் ராப்பகலா தண்ணியிலேயே நின்னாரு நகுல். அவரோட டெடிக்கேஷன் எங்களை வியக்க வச்சுருச்சு என்றார்.

நகுலுக்கு ஜோடியாக சித்து ப்ளஸ் 2 சாந்தினியும், அவனி மோடி என்ற மும்பை கிளியும் நடிக்கிறார்களாம். ஏதோ ஒரு படத்தை எடுத்தோம், நாலு பாட்டு ஒரு பைட்டுன்னு முடிச்சோம்னு இல்லாமல் கொஞ்சம் சமூக அக்கறையும் காட்டியிருக்கிறார் இந்த ப்ருத்வி. போபால் விஷவாயு தொடர்பான சில காட்சிகளை அந்த மண்ணிலேயே எடுத்திருக்கிறாராம். அதுமட்டுமல்ல, படத்தில் வரும் மணிவண்ணன் கேரக்டரும் அவர் பேசும் வசனங்களும் நிறைய யோசிக்க வைக்கும் என்றார்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் எல்லா பாடல்களையும் கம்போஸ் பண்ண ஃபாரின் லொகேஷன் கேட்டு தயாரிப்பாளரை டரியல் ஆக்காமல் இங்கேயே முடித்துக் கொடுத்தார் என்பது மேலதிக தகவல்!

No comments:

Post a Comment