Wednesday 20 June 2012

நயன்தாரா நடித்த படம் டிராப்? டைரக்டரால் வந்த வினை


டைரக்டர் ஜாதகத்துல தொழில் ஸ்தானத்தை மட்டும் பள்ளம் தோண்டி பார்க்காத குறையாக ஆராய்ந்துதான் கால்ஷீட் கொடுக்கிறார்கள் முன்னணி நட்சத்திரங்கள். நாம நடிச்ச படம் நடுவுல நின்னுட்டா, அவமானம் நமக்கும்தானே என்கிற பேரச்சம்தான் இதற்கு காரணம். அப்படியிருந்தும் நயன்தாரா நடித்துக் கொண்டிருந்த தெலுங்கு படம் ஒன்று டிராப்! தமிழில் தேவதையை கண்டேன், மலைக்கோட்டை போன்ற சில வெற்றிப்படங்களை இயக்கியிருக்கும் டைரக்டர் பூபதி பாண்டியனின் படம்தான் இது. இப்படத்தில் தெலுங்கு ஹீரோ கோபிசந்துடன் ஜோடி சேர்ந்திருந்தார் நயன்தாரா. படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள்தான் ஆகிறது. அதற்குள் படத்தை தொடர்வதா, வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறதாம் அங்கே. வேறொன்றுமில்லை, எந்நேரமும் பிராந்தியும் வாந்தியுமாக இருக்கிறாராம் டைரக்டர். அடுத்தவர் 'குடியுரிமை'யில் தலையிடுவானேன் என்பதால்தான் இப்படியொரு முடிவெடுத்திருக்கிறார்களாம் எல்லாரும்.

No comments:

Post a Comment