Wednesday 20 June 2012

ஜீவாவும் நானும் 'ஜெல்' போல ஒட்டிக்கொண்டோம் - மிஷ்கின்


இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் சூப்பர் ஹீரோ படம் ‘முகமூடி’. ஹீரோயினாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். சமீபத்தில் தொடர்ந்து சில நாட்களாக படப்பிடிப்பில் ரிஸ்கான சண்டைக் காட்சிகளில் நடித்ததால் ஜீவாவிற்கு கழுத்தில் சுளுக்கு பிடித்திருந்தது. ஸ்டண்ட் நடிகர்கள் சிலருக்குத் தான் கை, கால்களில் முறிவு ஏற்பட்டிருந்தது. அதற்குள் சிலர் ஜீவாவுக்கு படப்பிடிப்பில் விபத்து நடந்துவிட்டது என புரளியை கிளப்பிவிட்டனர். இந்த படத்தைப் பற்றி விரிவாக பேட்டியளித்துள்ள இயக்குனர் மிஷ்கின் “ முகமூடி சாதாரண மிடில்கிளாஸ் பையனின் கதை. நகைச்சுவை, காதல், சோகம், வீரம் என பல உணர்ச்சிகளைத் தொட்டு இறுதியில் படத்தின் கிளைமேக்ஸில் உச்சகட்டத்தை அடைவது தான் படத்தின் சிறப்பு. நானும் ஜீவாவும் சந்தித்த பின் ஒரு ‘ஜெல்’ போல ஒட்டிக்கொண்டோம். அந்த புரிதல் தான் ஜீவாவைத் தவிர இந்த படத்துக்கு யாரும் செட் ஆக மாட்டார்கள் என எனக்கு புரிய வைத்தது. வழக்கம் போல ஹீரோவைவிட வில்லன் பலசாலியாக இருப்பான். அதுபோன்ற பவர்ஃபுல் கேரக்டரில் தான் நரேன் நடிக்கிறார். பூஜா ஹெக்டே நல்லா நடிச்சிருக்காங்க. பூஜா உங்கள் இதயத்திற்குள் நுழைந்து வெளியே வருவதை நான் பார்க்க வேண்டும். நான்கு நாடுகளில் அலைந்து கடைசியாக ஹாங்காங்கில் ’சுபரில்லா வில்கிங்’ என்பவரிடம் சொல்லி தயார் செய்தது தான் ஜீவாவின் சூப்பர் ஜீரோ உடை. 6 மெடீரியல் கலந்து செய்யப்பட்டுள்ள அந்த உடையுடன் அறை மணி நேரம் நின்றாலே உடல் கொதித்துவிடும் ஆனால் ஜீவா எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஒத்துழைப்பு கொடுத்தார். குங்ஃபூ கலையில் 40 வருடம் அனுபவமுள்ள டோனி லுங் என்ற மாஸ்டரை வைத்துதான் சண்டைக் காட்சிகளை படமாக்கி இருக்கிறோம். அவர் புரூஸ்லீயுடன் எண்டர் தி டிராகன் படத்தில் சண்டை போட்டவர். ஜீவா கேரியர்லயும், என்னோட கேரியர்லயும் பெரிய பட்ஜெட் படமா அமைந்திருக்கிறது ‘முகமூடி’" என்று கூறினார்.

No comments:

Post a Comment