Friday 22 June 2012

எல்லை தாண்டும் மீனவர் பிரச்சினையை கையில் எடுத்துள்ள 'நீர் பறவை' திரைப்படம்


    வெறும் 45 லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட மைனாவை 7 கோடி வசூலித்துக் காட்டிய வெற்றிப் படமாக மாற்றிக் காட்டினார் உதயநிதி ஸ்டாலின்!
     அந்தப் படத்தின் இயக்குனரையும் அடுத்து தனது பேனரில் படம் இயக்கும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் பிரபுசாலமன் நழுவிவிட்டார்! அடித்து 60 லட்சம் செலவில் தயாரான தென்மேற்கு பருவகாற்று படத்தை பற்றி கேள்விப்பட்டு அதை உதயநிதி ஸ்டாலில் வாங்க இருந்த நேரத்தில்தான் விஜயகாந்த் கட்சிப் பிரமுகரான மைகேல் ராயப்பன் முந்திக்கொண்டார்! ஆனால் அவரால் உதயநிதி ஸ்டாலின் போல விளம்பரம் செய்ய முடியவில்லை! இதனால் தென்மேற்கு பருவகாற்று விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றதே தவிர, தமிழக பாக்ஸ் ஆபீஸில் ஐம்பது லட்சத்தைக் கூட வசூலிக்க முடியவில்லை. ஆனால் மூன்று தேசிய விருதுகளை அள்ளியது! படமும் உதயநிதி ஸ்டாலின்க்குப் பிடித்துப் போனது.

விளைவு! சீனு ராமசாமிக்கு 50 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்து தனது ரெட் ஜியாண்ட் மூவி தயாரிப்பில் சினு.ராமசாமியின் அடுத்த படைப்பான நீர் பறவையை இயக்கும் பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறார். இந்தப் படத்தில் வெண்ணிலா கபடி குழு புகழ் விஷ்ணுவும், சுனைனாவும் ஜோடியாக நடிக்கின்றார்கள். அழகி, கன்னத்தில் முத்தமிட்டால், துளசி ஆகிய படங்களுக்கு பிறகு நந்திதாஸ் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.
செல்லும் மீனவர்களுக்கு ஒரு சில நேரம் அதிகமான மீன்கள் கிடைக்கிறது. ஆனால் சில நேரங்களில் மிகச்சொற்பமாக மீன்கள் கிடைக்கின்றன. இதனால் அதிகமாக மீன் கிடைக்கும் ஆழ்கடல் நோக்கி அவர்கள் செல்லவேண்டியிருக்கிறது. இதன் காரணமாக கடல் எல்லையைத் தாண்டுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது. இப்படி எல்லை தாண்டி மீன் பிடிக்கும்போது அந்நிய கடற்படையாலும், அந்நிய மீனவர்களாலும் கைது செய்யப்படுகிறார்கள், சில நேரம் குண்டடி கூட பட்டு உயிரிழக்கிறார்கள். இந்தப் போராட்ட வாழ்க்கைக்கு மத்தியில் அரசியலும், மதமும் அவர்களை எப்படி அலைக்கழிக்கிறது என்பதுதான் இந்த நீர் பறவை!

நீர்பறவை பற்றிய இந்த சூடான தகவல்களுக்கு மத்தியில் அணல்பறக்கும் செய்தி ஒன்று அடிபடுகிறது உதயநிதி ஸ்டாலின் அலுவலக வட்டாரத்தில்! தமிழக எம்பிக்கள் குழு இலங்கைக்கு போய் வந்தாகிவிட்டது! பாரதிவிழாவும் கொழும்புவில் நடக்க இருக்கிறது. இந்தச் சுழ்நிலையில் நீர் பறவை படத்தை ஏன் நாம் இலங்கையில் விழா வைத்து வெளியிடக் கூடாது என்று இயக்குனர் சீனுவிடம் கேட்டாராம் உதயநிதி! ஆனால் சீனு யோசிங்க சார் என்று சொன்னாலும் இலங்கையில் இந்தப் படத்தின் இசையை வெளியிட்டால் என்னனென்ன பிரச்சனைகள் வரும் என்பதைப் பற்றி டிஸ்கஸ் செய்து கொண்டிருகிறாராம்!

No comments:

Post a Comment