Friday 22 June 2012

முதல்முறையாக விரட்டி விரட்டி காதலிக்கிறேன். இயக்குனர் சசி



  மண்ணை மீட்ட சுந்தரபாண்டியனை எல்லோருக்கும் தெரியும்... நான் பெண்ணை மீட்ட சுந்தரபாண்டியன்!'' - தாடிக்குள் பூக்கிறது சசிகுமாரின் டிரேட் மார்க் புன்னகை. தான் தயாரித்து நடிக் கும் 'சுந்தரபாண்டியன்’ படத்துக்கு, தன்னு டைய உதவி இயக்குநர் பிரபாகரனையே இயக்குநர் ஆக்கி இருக்கிறார்.
''ஒரு பக்கம் உங்க சீனியர் பாலுமகேந்திரா இயக் கும் படத்தைத் தயாரிக்கிறீங்க... இன்னொரு பக்கம் உங்க ஜூனியரை அறிமுகப்படுத்துறீங்க... ஒரு தயாரிப்பாளரா உங்க ஆசை என்ன?''
''பாலுமகேந்திரா சார் படத்தைப் பத்தி அவர்தான் பேசணும். ஒரு தயாரிப்பாளரா, நான் பிரபாகரனுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கேன். ஆனா, ஓர் இயக்குநரா பாலுமகேந்திரா சார் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கார். எங்க கம்பெனிக்குக் கிடைச்ச கௌரவம் இது.
தனியாப் படம் பண்ண விரும்பி ஒரு கதை பண்ணதும், பிரபு என்கிட்ட வந்து நிக்கலை. ரெண்டு மூணு தயாரிப்பாளர்கள்கிட்ட கதை சொல்லி அது அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தும், அவங்களால பண்ண முடியாமப்போச்சு. இருந்தாலும், அவன் வெளியேதான் வாய்ப்பு தேடிட்டு இருந்தான். அந்தத் தேடலோட தீவிரம் எனக்குப் பிடிச்சது. அவன் போராட்டம் என் போராட்டமாத் தெரிஞ்சது. 'கதை சொல்லு... பார்ப்போம்’னு சொன்னேன். மழையில நனைஞ்ச செடி மாதிரி சிலிர்க்கவெச்சான். ஸ்பாட்ல பிரபு வேலை பார்க்கிற விதம் எனக்குப் பெருமையா இருக்கு. சுந்தரபாண்டியனுக்கு அடுத்தபடியா இன்னும் ரெண்டு அறிமுக இயக்குநர்களோட படங்கள்ல நடிக்கிறேன். அதுக்கான தைரியத்தைக் கொடுத்தது பிரபுதான்.''
''சுந்தரபாண்டியன்... கம்பீரமான தலைப்பு... கதையும் அப்படித்தானா?''
''இல்லீங்க... தெரிஞ்சோ தெரியாமலோ இதுவரை பண்ண படங்கள்ல கையோடவே கத்தியும் கெட்டியா ஒட்டிக்கிட்டு இருக்கும். இந்தப் படத்தில் கத்திக்குப் பதிலா காதல். மனசும் மயக்கமுமா மிதக்குற கேரக்டர். இதுவரை என்னைத்தான் கதாநாயகிகள் விரட்டி விரட்டிக் காதலிப்பாங்க. இப்போ முதல்முறையா நான் அவங்களை விரட்டுறேன்.''
''அப்போ, லெக்ஷ்மி மேனன் சரி... அதென்ன உங்களைச் சுத்தி அத்தனை பாட்டிகள்?''
''எல்லாருக்கும் பிடிச்சவன் ஒருத்தன் இருப்பான்ல... அவன்தான் சுந்தரபாண்டி யன். சேட்டையும் சிரிப்புமா பொண்ணுங்க மத்தியில வளையவர்றவன். என் தோழி கள் எல்லாருமே பாட்டிகள்தான். பாட்டிங் கிற ஆத்மார்த்த உறவைச் சின்ன வயசு லயே மிஸ் பண்ணவன் நான். அனுபவங் களையும் ஆசாபாசங்களையும் சேத்து வெச்சிருக்கிற பாட்டிகளோட பேசிச் சிரிச்சப்ப என் இழப்பு இரு மடங்கா தெரிஞ்சது. ஒவ்வொரு பாட்டியும் ஒரு பல்கலைக்கழகம்.  
அவங்களுக்கு நடுவுல லெக்ஷ்மி மேனன் ஒரு புள்ளிமான். பொண்ணு பத்து நொடிக்குப் பத்து எக்ஸ்பிரஷன் கொடுக் குது. அற்புதமான எதிர்காலம் இருக்கு.''  
''சட்டுனு விழா மேடைகள்ல இருந்து காணாமப் போயிட்டீங்களே... என்ன ஆச்சு?''
'' 'சுப்ரமணியபுரம்’ வெற்றி, பாராட்டு விழா, விருதுனு நிக்க நேரம் இல்லாம என்னை ஓடவெச்சது. அப்போ ஒரு நாள் பாலா அண்ணனைப் பார்த்தேன். 'கலந்துக்க... எல்லாத்திலும் கலந்துக்க... ஒரு கட்டத்தில் உனக்கே போதும்னு தோணும். அந்தச் சலிப்பு அவசியம்டா’னு சொன்னார். இப்போ எனக்கு எல்லாமே போதும்னு தோணுது.''
''திடீர்னு ஏழை மாணவர்களுக்காக உண்டியல் குலுக்கி நிதி திரட்ட ஆரம்பிச்சீங்களே... பொது வாழ்க்கையில் கால் பதிக்கும் ஆசையா?''
''பணம் இல்லாமப் படிக்க முடியலைங்கிற நிலைமை இனியும் நீடிக்கக் கூடாது. அதுதான் என் ஆசை. ஒரு கல்லூரி விழாவுக்குப் போயிருந்தேன். அங்கே மாணவர்களே சேர்ந்து ஏழை மாணவர்களைப் படிக்கவைக்கிற திட்டத்தை அமல்படுத்தி இருந்தாங்க. அதே மாதிரி எல்லாக் கல்லூரிகள்லேயும் மாணவர்களே மாணவர்களுக்கு உதவும் சக்தியாக இருக்கணும்கிறதுதான் என் கோரிக்கை. அதை நான் போற எல்லாக் கல்லூரிகளிலும் வலியுறுத்திப் பேசுறேன். இந்த வருஷம் மட்டும் குறைந்தபட்சம் நூறு ஏழை மாணவர்களை மாணவர்களின் நிதி மூலமாவே படிக்கவைக்கிறேன். இதில், என் பங்கு நிதி ரொம்பக் குறைவுதான். போன வாரம் ஆத்தூர்ல இருந்து பிரபுங்கிற ஆசிரியர் பேசினார். '1090 மார்க் எடுத்த எங்க ஊரு பொண்ணைப் படிக்கவைக்க வழி இல்ல சார்’னு சொன்னவர், என்னை அணுக முடியாம சிரமப்பட்டதையும் சொன்னார். அந்த ஆசிரியர் மாதிரி கல்வி உதவிக்காக எத்தனையோ பேர் என்னைப் பிடிக்க முடியாமல் தவிச்சிருப்பாங்க. அதனால  இணையதளம் ஆரம்பிச்சு, அதன் மூலமா யாரும் கல்விக்காகத் தொடர்புகொள்ளலாம்னு சொல்லி இருக் கேன்.
உதவத் தயாரா இருக்கிறவங்களையும் உதவிக்காக அல்லாடுபவர்களையும் கை கோக்கவைக்கிறது மட்டும்தான் என் வேலை. பப்ளிசிட்டிக்காகவோ, அரசியல் ஆசை யிலேயோ இதை நான் பண்ணலை. இதுல, எந்த இடத்திலும் என் பேர் வந்துடக் கூடாதுனு தெளிவா இருக்கேன். சினிமாவோ, கல்வியோ... போராடுறவன் ஜெயிக்கணும். அவ்வளவுதான் சார்!''

No comments:

Post a Comment