Thursday 21 June 2012

என் அடுத்த படம் இது வரை சொல்லாத கதை அல்ல. சுசீந்திரன்




வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, ராஜபாட்டை படங்களை இயக்கிய சுசீந்திரன், இப்போது ஆதலால் காதல் செய்வீர் என்ற புதியபடத்தை இயக்கி வருகிறார.

இப்படத்தில் போக்கிரி தயாரிப்பாளர் ரமேஷ் மகன் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹீரோயினாக வழக்கு எண் 18/9 பட நாயகி மனீஷா யாதவ் நடிக்கிறார். இந்தபடம் பற்றி டைரக்டர் சுசீந்திரன் சொல்லும்போது, என் தந்தை நல்லு பெயரில் தயாரிப்பு கம்பெனி தொடங்கியுள்ளேன்.

என் தம்பி சரவணனை தயாரிப்பாளராக ஆக்கியுள்ளேன். படம் கிட்டத்தட்ட 60 சதவீதம் முடிந்துவிட்டது. ஒரு கல்லூரி பின்னணியில் நடக்கும் காதல் கதை. இது வரை சொல்லாத கதை அல்ல. ஆனால் நான் கொஞ்சம் புதிய முயற்சி எடுத்துள்ளேன்.

ஏற்கனவே குறுகிய பட்ஜெட், அதிக பட்ஜெட் என்று வொர்க் பண்ணிய அனுபவம் இருக்கு, எனவே சரியான திட்டமிடல் மூலம் சரியான முறையில் இப்படத்தை எடுத்து வருகிறேன் என்றார்.

No comments:

Post a Comment