Wednesday 20 June 2012

’சட்டம் ஒரு இருட்டறை’ இருட்டினுள் தள்ளப்பட்டது!


எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த், விஜய் நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற படம் ‘சட்டம் ஒரு இருட்டறை’. சீமான், சத்யராஜ், விக்ராந்த் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘சட்டப்படி குற்றம்’ என்ற படமும் சட்டம் ஒரு இருட்டறை படத்தின் ரீமேக் தான் என பேசப்பட்டாலும் அதை பற்றிய உறுதியான தகவல் வெளிவரவில்லை. இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தான் முதலில் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை படத்தை மறுபடியும் இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு, கார்த்திகா, ரீமாசென், பியா ஆகியோர் நடிப்பதாக இருந்தது. சில நாட்கள் ஷூட்டிங்கும் நடந்தது. ஆனால் திடீரென்று படத்தின் இயக்குனர் ஹீரோவை மாற்றப் போவதாக தெரிவித்திருக்கிறாராம். கையெழுத்து போடுவதற்கு முன் நூறு முறை யோசித்துவிட்டு கையெழுத்து போடும் நடிகை கார்த்திகா, ஹீரோ ரோலில் நடிப்பவரை பொருத்து தான் நான் நடிப்பதும் நடிக்காததும் என முன்னரே கூறியிருந்தார்.

No comments:

Post a Comment