Wednesday 20 June 2012

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி காலமானார்


      பிரபல தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி இன்று காலை காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 73. 
முன்னணி தென்னிந்திய நடிகர்களான சிவாஜி, எம்.ஜி.ஆர் ரஜினி, கமல், மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்டோரை வைத்து 75 க்கும் அதிகமான படங்களை தயாரித்தவர் கே.ஆர்.ஜி ஆவார். மாரடைப்பால் காலமாகும் போது அவ்ருக்கு வயது 73 ஆகும்.

ஜே.ஆர்.ஜியின் பூதவுடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கபட்டுள்ளது. அவரது மறைவுக்கு ரஜினி, ஏவி.எம்.சரவணன், எஸ்.ஏ.சந்திரசேகரன், கலைப்புலி எஸ்.தானு உட்பட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மாலை இறுதி ஊர்வல நடக்கிறது.

கே.ஆர்.ஜி.இண்டர்நேஷனல் பிலிம் கார்பரேஷன் சார்பில் சிறீதர் இயக்கத்தில் வெளிவந்த நெஞ்சில் ஓர் ஆலயம், சிவாஜி நடித்த நேர்மை, ரஜினி நடித்த ஜானி மற்றும் துடிக்கும் கரங்கள்,  கமல் நடித்த சிவப்பு ரோஜாக்கள், கடல் மீன்கள், பிரபு நடித்த பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், விஜய் நடித்த மின்சார கண்ணா என்பன அவர் தயாரித்த சில முக்கிய திரைப்படங்கள் ஆகும்.

No comments:

Post a Comment