Tuesday 26 June 2012

விஸ்வரூபம் படத்தில் 11.1 அளவுக்கு ஹாலிவுட் தரத்தில் சவுண்ட் தொழில்நுட்பம்.


 கமல் நடித்து இயக்கும் 'விஸ்வரூபம்' படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் நடக்கின்றன. இதன் டிரெய்லர் சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. படத்தை ஹாலிவுட் தரத்துக்கு இணையாக உருவாக்க முயற்சிகள் நடக்கின்றன. 

இதன் சவுண்ட் தொழில் நுட்பத்தை 11.1 அளவுக்கு வைக்கப்போவதாக கமல் அறிவித்தார். இதுவரை இந்த அளவு சவுண்ட் தமிழ் படங்களில் இருந்தது இல்லை. முதல் முறையாக விஸ்வரூபம் படத்தில் சேர்க்கப்படுகிறது. இதற்காக கமல் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 

கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், மிக்சிங், ரீ ரிக்கார்டிங் போன்ற பணிகளும் ஹாலிவுட் ஸ்டூடியோக்களிலேயே நடக்க உள்ளது. ஹாலிவுட் நிபுணர்கள் பலர் விஸ்வரூபம் பட வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 

ஆகஸ்டு மாதம் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடு நடக்கிறது. இப்படத்தில் கமல் கதக் நடன கலைஞராக வருகிறார். ஆண்ட்ரியா, பூஜாகுமார் ஜோடியாக நடிக்கின்றனர். பெரும் பகுதி படப்பிடிப்பு வெளிநாட்டிலேயே முடிந்துள்ளது.

No comments:

Post a Comment