Thursday 28 June 2012

'தாண்டவம்' படத்திற்காக லண்டனில் நடந்த சண்டைக்காட்சி!


Thandavam
விக்ரமும் இயக்குநர் விஜய்யும் இணைந்து பரவலான வெற்றியைப் பெற்ற படம் “தெய்வதிருமகள்” இதே வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்து உருவாக்கும் படம் ‘தாண்டவம்’!
“பல பேரின் சுயநலத்துக்காக ஒருவன் பாதிக்கபடுகிறான். அதிலிருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான், மீண்டு வந்தவன் அவர்களை எப்படி பலி வாங்குகிறான் என்பதுதான் கதை “என்கிறார் இயக்குநர் விஜய்”
தாண்டவம் ஒரு முழுநீள ஆக்.ஷ்ன் திரில்லர் படமாக உருவாகி வருகிறது.
“தெய்வதிருமகள்” வெற்றிக்கு பிறகு மீண்டும் விக்ரமை வைத்து இயக்குவது பற்றிவிஜய் கூறும்போது “விக்ரம் தேசிய அளவில் சிறந்த நடிகர். அவரை வைத்து இயக்குவது பலருக்கும் ஒரு கனவாகும் ‘தெய்வதிருமகள்’ மூலம் அக்கனவு எனக்கு நிஜமானது. அந்தப்பட அனுபவத்தில் எங்களுக்குள் நல்ல புரிதல் வந்தது. மீண்டும் இணைய விரும்பினோம். அதுதான் ‘தாண்டவம்’ தெய்வதிருமகளைத் தாண்டி சிறப்பாக வர வேண்டும் என்று உழைத்து வருகிறோம். அந்தப் படம் எங்களுக்கு எல்லாம் மரியாதையை தேடிதந்தது. அதைத்தாண்டி வேண்டும் என்கிற முனைப்புடன் முயற்சியும் உழைப்பும் காட்டி வருகிறோம்.” என்கிறார்.
இது வெறும் கோபம் பழிவாங்கும் உணர்வுகளை மட்டும் வெளிப்படத்தும் படமல்ல. பல உணர்ச்சிகரமான விஷயங்களையும் உள்ளடக்கிய படமாக இருக்கும் என்று நம்புகிறார்.“தெய்வதிருமகள்” போலவே இதிலும் இரண்டு நாயகிகள் ஒருவர் ஆந்திரத்து அல்வா அனுஷ்கா. இன்னொருவர் வெளிநாட்டு ஸ்ட்ராபெரி எமி ஜானக்சன்.
இந்த இரண்டுநாயகிகளும் தமிழ் சினிமாவின் சூத்திரப் பாத்திரங்களக இருக்க மாட்டார்கள். துணைக் கோள்களாக நாயகனை சுற்றி வருபவர்கள் அல்ல இருவருமே
சத்திவாய்ந்த அழுத்தமான பாத்திரம் ஏற்றிருக்கிறார்கள்
வெற்றிக்கட்சிகளின் கூட்டனி ‘தெய்வதிருமகள்’ படத்தில் நடித்த நாயகன் நாயகி மட்டும்ல்ல நாசர். சந்தானம் போன்ற நட்சத்திர அணியும் இப்படத்திலும் தொடர்கிறது
படத்தின் சிறப்பு அம்சங்களின் ஒன்று திறமைசாலி நட்சத்திரங்கள் இணைந்ததிருப்பது மட்டும்ல்ல கதை நடைபெறும் பின்புலமும் புதிய பாலமாக இருக்கும்.
கதையின் 70 % சிங்களத்திலிருந்து லண்டனில் பயணிக்கிறது. 30% இந்தியாவில் நிகழும்.
லண்டனில் தொடர்ச்சியாக 70 நாட்கள் படப்பிடிப்பு நடத்திவிட்டு வந்து இருக்கிறார்கள். குறிப்பாக சண்டை காட்சிகளை நிறைய சிரமப்பட்டு எடுத்து இருக்கிறார்கள். லண்டன் டவர் பிரிட்ஜ் பாலத்தில் எடுக்கப்பட்டுள்ள துரத்தல் மற்றும் சண்டை காட்சிகள் சிலிர்க்கவைக்கும் சினிமா அனுபவமாக இருக்கும். லண்டன் தொடர்புடைய காட்சிகளில் அங்குள்ள பல நடிகர் நடிகைகளை நடிக்க வைத்துள்ளனர். சண்டை காட்சிகள் நம்மூர் ஸ்டன்ட் மாஸ்டர் Manohar varma க்கு அவ்வூர் சண்டை கலை நிபுணர்களையும் பங்கேற்க வைத்து காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டை தொடர்ந்து நம்முரிலும் மோதல் கட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.
விஜய், ஜி.வி பிரகாஷ்குமார் இசைக் கூட்டணி உட்கட்சி பூசல் இல்லாத உயர்ந்த கூட்டணி. விஜய் நினைக்கிற ஸ்ருதியில் பிரகாஷ்குமார் பாடுகிற அளவுக்கு புரிதல் கொண்டவர்கள், தாண்டவம் ஜி.வி பிரகாஷ்25வது படம்.வெளிநாட்டு பின்னணி கதை வேறு. எனவேகூடுதல் கவனம் செலுத்தி உழைத்து வருகிறார் இசையமைப்பாளர். பாடல்கள் நா. முத்துகுமார்.
எதிரிகளை பழிவாங்க விக்ரம் ஆவேசமாக ஆடும் ருத்ர “தாண்டவம்” படம் பார்ப்பவர்களை எதுமாதுறியும் இல்லாத புதுமாதிரியான படம் என்று ஆனந்த “தாண்டவம்” ஆட்டிவைக்கும் என்று நம்பலாம்.....

No comments:

Post a Comment