Friday 29 June 2012

கே.பாலசந்தரின் "காந்தி கணக்கு!


       நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள படம், "ஆரோகணம் ! இதில், சரிதாவின் தங்கையான விஜி சந்திரசேகர், முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவர், "தில்லு முல்லு படத்தில் அறிமுகமாகி, சின்னத் திரையிலும் நடித்து வருபவர்.இப்படத்தின் ஆடியோ விழாவுக்கு வருகை புரிந்த டைரக்டர் கே.பாலசந்தர், 35 லட்சத்தில், "ஆரோகணம் படமாக்கப்பட்டுள்ளதை அறிந்து, தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். அதோடு, "இதைப் பார்க்கும்போது, மீண்டும் படம் இயக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டுள்ளது. லட்சுமி ராமகிருஷ்ணன், 35 லட்சம் செலவு செய்துள்ளார்; என் தகுதிக்கு, ஒரு 70 லட்சத்திலாவது படத்தை எடுப்பேன். அந்தப் படம் ஒருவேளை ஓடவில்லை என்றாலும், கவலைப்படமாட்டேன். அதற்கு ஆன செலவை, "காந்தி கணக்காக நினைத்துக் கொள்வேன் என்றார் பாலசந்தர்.

No comments:

Post a Comment