Friday 29 June 2012

கோச்சடையானில் 42 ஓவியக்கல்லூரி மாணவர்கள்!


   'ஈரோஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து மீடியா ஒன் குளோபல் என்டர்டேயின்மெண்ட் நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தியாவின் முதல் 3டி ஃபெர்பாமென்ஸ் கேப்சரிங் படம்தான் கோச்சடையான்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகாபடுகோனே, சரத்குமார், ஜாக்கி ஷ்ராஃப், ஆதி, நாசர், ஷோபனா, ருக்மினி ஆகியோர் நடித்து வருகிறார்கள். ஃபெர்பாமென்ஸ் கேப்சரிங் முழுவதுமாக முடிந்து விட்டது! தற்போது கம்பாசிட்டிங் மற்றும் 2டி வேலைகளும் நடிந்து வருகின்றன

இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கம் மேற்பார்வை செய்ய சௌந்தர்யா சு. அஸ்வின் இயக்கும் இந்தப் படத்துக்கு 2டி அனிமேஷன் ஓவியங்களை(கதாபாத்திரங்களை தேவையான போர்ஷன்களுக்கு வரைய)

சென்னை எழும்பூரில் உள்ள புகழ்பெற்ற தமிழ்நாடு அரசு கவின்கலைக்கலூரியில்(காலேஜ் ஆஃப் பைன் ஆர்ட்ஸ் கல்லூரி)படிக்கும் முதுகலை ஓவிய மாணவர்களை இயக்குனர் சௌந்தர்யா.எஸ் அஸ்வின் தேர்ந்தெடுத்துள்ளார். இவர்களை கலை இயக்குனர் வேலுவின் கீழ் 42 மாணவர்கள் மிக ஆர்வமாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களுடன் கும்பகோணம் காலேஜ் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் கல்லூயில் படைத்த முன்னாள் ஓவிய மாணவர்கள், தற்போது பல்வேறு பன்னாட்டு அனிமேஷன் கம்பெனிகளில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் 50 பேரையும் தேர்வு செய்து அனிமேஷன் வேலைகளை துரித்தப்படுத்தியிருகிறாராம்!

இது தவிர Concept artiste ஆக 60 நபர்கள் பணியாற்றிவருகிறார்கள் என்ற தகவல் அதிகார பூர்வமாக நமக்குக் கிடைக்கிரது

No comments:

Post a Comment