Wednesday 27 June 2012

மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷா மறுத்தது ஏன்?




ஐந்து இயக்குநர்கள் சேர்ந்து மலையாளத்தில் ஒரு படத்தை இயக்க உள்ளனர். ஆக்ஷன் படமான இதில் ஐந்து முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளனர். மோகன்லால் நடிக்கும் காட்சிகளை இயக்குநர் ஜோஷி படமாக்குகிறார். லாலுக்கு ஜோடியாக திரிஷாவை நடிக்க வைக்க எண்ணினார். ஆனால் திரிஷா மறுத்திருக்கிறார்.
விசாரித்தால், ""மலையாள பட வாய்ப்புகள் நிறைய வருகிறது. ஆனால் தமிழ் படங்களுக்கே திரிஷா முக்கியத்துவம் தந்து வருகிறார். இப்போதைக்கு மலையாளப் படங்களில் நடிக்க திரிஷாவுக்கு நேரமில்லை''. என்கின்றனர். ஆனால் படத்தில் நடிக்க 40 லட்சம் திரிஷா கேட்டதாகவும், தயாரிப்பாளர் அதற்கு சம்மதிக்காததால்தான் அந்த படத்தை திரிஷா மறுத்து விட்டதாகவும் சிலர் சொல்லுகின்றனர்.

No comments:

Post a Comment