Saturday 30 June 2012

ஒழுக்கம் தான் நம்மை காப்பாற்றும்: நடிகர் சிவக்குமார் பேச்சு


கோவையை அடுத்த சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் கல்வி அறக்கட்டளை சார்பில் சூலூர் ஒன்றிய பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புகளில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா மற்றும் முன்னாள் தலைமை ஆசிரியர் திருவேங்கடசாமி நூற்றாண்டு விழா நடந்தது.

விழாவில் முன்னாள் மாணவர்கள் கல்வி அறக்கட்டளை தலைவரும், நடிகருமான சிவக்குமார் பேசியதாவது:-

ஏழையாக கிராமத்தில் பிறப்பது பாவம் இல்லை, சாபம் இல்லை. மாணவர்கள் கிராமத்தில் பிறந்து விட்டதாக தாழ்மையாக எண்ணக்கூடாது. மேதை ஆவதற்கு கிராமத்தில் பிறக்க வேண்டும் என எண்ணிக்கொள்ள வேண்டும். படிப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல. அனைவருக்கும் ஒரு திறமை இருக்கிறது. நீங்கள் முயற்சி செய்தால் அந்த திறமையை வளர்த்து வாழ்க்கையில் முன்னேற முடியும். அனைத்து துறையிலும் கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். ஒழுக்கம் இல்லாவிட்டால் வாழ்க்கை முடிந்துவிடும். ஒழுக்கம் ஒன்று தான் அனைவரையும் காப்பாற்றும். பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் வாழ்நாள் முழுவதும் மறக்கக் கூடாது.

மேற்கண்டவாறு நடிகர் சிவக்குமார் பேசினார்.

No comments:

Post a Comment