Friday 29 June 2012

சிம்புவின் வட சென்னை தள்ளிப்போனது ஏன்? : இயக்குனர் வெற்றிமாறன்




சிம்புவை வைத்து, வெற்றிமாறன் இயக்குவதாக இருந்த வடசென்னை திரைப்படம் கைவிடப்பட்டுவிட்டதாக வெளியான செய்திகளை அடுத்து, அதை மறுத்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.

சில தொழில் நுட்ப பிரச்சனைகள் காரணமாக படம் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும், நிச்சயம் வடசென்னை திரைப்படத்தை இயக்குவேன் என்றும் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.

பொல்லாதவன், ஆடுகளம் போன்ற வெற்றிப் படங்களை தனுஷை வைத்து இயக்கியவர் இயக்குனர் வெற்றிமாறன். அவர் சிம்புவை வைத்து இயக்குவதாக இருந்த வடசென்னை திரைப்படம் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்குள்ளாகவே முடிந்து போனதாக தகவல்கள் வெளியாயின. அதற்கு பதில் அளித்துப் பேசிய வெற்றிமாறன், "ஆடுகளம் படம் வெளியாவதற்கு முன்பே, வடசென்னை படம் பண்ணலாம் என்று முடுவு எடுத்திருந்தேன்.

வட சென்னை படத்தின் கதை எனக்கு ரொம்ப அன்யோன்யமாக வந்திருந்தது. உடனே படம் இயக்க முடிவு செய்து, ஆரம்பித்தும் விட்டோம். ஆனால், சில தொழில் நுட்ப பிரச்சனைகள் காரணமாக இப்போது வடசென்னை படத்தை இயக்க முடியாத நிலையில் இருக்கிறோம். தொழில் நுட்ப பிரச்சனைகள் சரியாவதற்குள், தனுஷ் அவர்களை வைத்து ஒரு படம் இயக்கிவிட்டு மீண்டும், வடசென்னை படத்தைக் கையில் எடுப்பேன். நிச்சயம் சிம்புதான் கதாநாயகன்" என்று கூறிய வெற்றிமாறன்,


"நடிகர் நகுல் நடிக்கும் பிருந்தாவனத்தில் ராஜகுமாரன் என்னும் திரைப் படத்திற்கு வசனம் எழுதுகிறேன். இந்த படத்தை இயக்குபவர் டைரக்டர் அர்ஜூனுடைய உதவி இயக்குனர். அவர் என்னிடம் இந்த ஸ்கிரிப்டைப் படித்துப் பாருங்கள் என்றார். படித்தவுடன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனவே நான் வசனம் எழுதுகிறேன் என்றேன். நீங்கள் எழுதினால் எனக்கும் சரிதான் என்றார் அவர். இப்படித்தான், நான் பிருந்தாவனத்தில் ராஜகுமாரன் திரைப் படத்திற்கு வசனகர்த்தாவானேன்" என்கிறார் வெற்றிமாறன்.

No comments:

Post a Comment