Wednesday 27 June 2012

ரஜினி வீட்டில் ரெய்டா? ஓரு சந்திப்பின் பின்னணி...


Rajinikanth - Kalaignar

    ஒரு மெர்குரியும் இன்னொரு மெர்குரியும் சந்தித்துக் கொண்டால் அந்த இடமேசூரியனாகி கண்களை கூச வைக்கும். ஆனால் காதுகளை அடைக்கிறது இரண்டு வெளிச்சங்கள் சந்தித்துக் கொண்ட செய்தி. அண்மையில் கலைஞர் கருணாநிதியை, ரஜினி சந்தித்தாரல்லவா? இதற்குதான் ஓராயிரம் உட் காரணங்களை கற்பிக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

அவரது பிறந்த நாளின் போது நான் வெளிநாட்டிலிருந்தேன். திரும்பி வந்தவுடன் சந்திக்கணும் என்பதால்தான் சந்தித்து வாழ்த்து சொன்னேன் என்று இந்த சந்திப்புக்கு விளக்கம் கொடுத்திருந்தார் ரஜினி. ஆனால் உண்மை அதுவல்ல என்கிறது சில வதந்திகள்.

தனது வீட்டிற்கு இன்கம்டாக்ஸ் ரெய்டு வரப்போவதை முன்கூட்டியே அறிந்துதான் மத்திய அரசில் வலுவாக அங்கம் பெற்றிருக்கும் கலைஞரை சந்திக்க போயிருந்தார் ரஜினி. போன காரியம் செவ்வனே நடந்தேறியது என்கிறது அந்த வதந்தியின் நீட்சி. அதற்கு பரிகாரமாக தனது பேரன் உதயநிதியின் ரெட்ஜயன்ட் மூவிஸ் தயாரிக்கும் ஒரு படத்திற்கு கால்ஷீட் கேட்டாராம் கலைஞர். இப்படி மேலும் மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கிறது இந்த சந்திப்பு குறித்த தகவல்கள்.

இதையெல்லாம் கடும் கோபத்தோடு மறுக்கும் உதயநிதி ஸ்டாலின், எனக்கு ரஜினி சார் கால்ஷீட் வேணும்னா நானே நேரடியாக கேட்க மாட்டேனா? தலைவருக்கு வேறு வேலை இல்லையா? ரஜினியிடம் கால்ஷீட் கேட்பதுதான் அவர் வேலையா? என்கிறார்.

சில நிஜவாழ்வு திரைக்கதைகள் படத்தை விட சுவாரஸ்யமாதான் இருக்கு!

No comments:

Post a Comment