Wednesday 27 June 2012

முழு வேகத்தில் துப்பாக்கி!



   நடிகர் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் துப்பாக்கி படத்தின் போட்டோக்கள் இணையதளத்தின் பல இடங்களில் உலா வந்துகொண்டிருக்கின்றன. பெரும்பாலும் விஜய்யின் பிறந்தநாளன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட துப்பாக்கி படத்தின் டிரெய்லர், வெளியாகாமல் விஜய்யின் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. 


ரசிகர்களின் இந்த ஏமாற்றத்தை ஈடுசெய்யும் வகையில் ‘துப்பாக்கி’ படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய வேண்டும் என முழு வேகத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது துப்பாக்கி டீம். ஓரிரு வாரங்களில் ’துப்பாக்கி’ டிரெய்லர் வெளியிடப்படும் என இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அறிவித்துள்ளார். 


துப்பாக்கி படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதால் ஆகஸ்டு 15-ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்யும் முனைப்புடன் படக்குழு இருப்பதாக தெரிகிறது. ஆனால் ஆகஸ்டு மாதம் கமல் இயக்கி நடித்திருக்கும் ‘விஸ்வரூபம்’ படமும் ரிலீசாக இருப்பது குரிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment