Thursday 28 June 2012

நிறுத்தணும்... எல்லாத்தையும் நிறுத்தணும்!



        'பிரிக்க முடியாதது’ பட்டியலில் தமிழனுக்கும் தமிழ் சினிமா வுக்கும் நிரந்தர இடம் உண்டு. அந்த தமிழ் சினிமா வின் சில 'பிரிக்க முடியாத சங்கதி’கள் இவை...

 ஷங்கர் படங்களில் மலை, ரயில், ரோடு, லாரி, மனுஷன் (முக்கியமா தொப்பை!) ஆகிய பிராப்பர்ட்டிகளில் பெயின்ட் அடிக்கக் கூடாது. ஆதிவாசிகளுக்கே தெரியாத காட்டுக்குள் முதல்முறையா ஷூட் பண்ணிட்டு வந்து, 'அங்கே டிரக்கில் போனோம், கயிறு கட்டி இறங்குனோம், ப்ரீஸியா இருந்தது’னு பேட்டி கொடுக்கக் கூடாது. லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... இனி, ரஜினியை ரஜினியே விரும்பினாலும் யூத்தா காட்டக் கூடாது!

 மிஷ்கின் படங்களில் இனியும் மஞ்சள் உடைத் தேவதை ஆடினால், ஒவ்வொரு தமிழனும் அறச் சீற்றத்தோடுபொங்கி எழ வேண்டும். 'ஒரு அட்டைப் பெட்டியில் ரெண்டுவெட்டப் பட்ட கைகள்’னு ரைமிங் டயலாக், நாலு கிலோ மீட்டர் தூரத்துல இருந்து கேமராவை அப்படியே நகர்த்திக் கொண்டுவந்து காலுக்கு டைட் ஜூம் வைக்குறது... ப்ளீஸ்! வேண்டாம் சார். (அப்புறம் மறக்காம அந்த கூலிங் கிளாஸைக் கழட்டிருங்க!)

 செல்வராகவன்ஜி... சோழர் பரம்பரையை கேம்ப் ஃபயர் ஆடவிட்டதுக்கே உங்களுக்கு ஃபைன் போடணும் பாஸ். ஹீரோ கேரக்டரை சைக்கோவா காட்டுறது, ஹீரோயின் ஹீரோவை 'கரெக்ட்’ பண்றதுலாம் தொடர்ந்தா, உங்களை வியட்நாம் பக்கம் பாம்புத் தீவுக்கு நாடு கடத்திருவோம்! 

 படம் ஓடுதோ இல்லையோ... அஜீத் இனி படங்களில் 'நீயா... நானா’ கோபிநாத் கோட், கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு 'நடக்கவே’ கூடாது. மிக முக்கியமா 'எரிமலைக்குச் சூடுவைப்பான்... சுனாமியைச் சுருட்டிவைப்பான்... கருவாட்டுக் குழம்பை மணக்கவைப்பான்’னு 'நடந்துட்டு மட்டுமே இருக்குற’ அஜீத்துக்கு பில்ட்-அப் பாடல்கள் எழுதும் கவிஞர்களுக்கு 'மெமரி லாஸ்’ ஊசி குத்தணும்!

 வெடி வெச்சுப் பறக்குற டாடா சுமோ, அழுகாச்சி அத்தைப் பொண்ணு, நண்டு சிண்டு குண்டுனு மெகா சீரியல் குடும்பம்... இதெல்லாம் இல்லாம ஹரி படம் எடுத்தா சரி! இல்லைனா... பத்து நாள் பசியோட இருக்குற சிங்கத்துக்கிட்ட புடிச்சிக் கொடுத்துருவோம்! 

 கௌதம் மேனன் படத்துல வில்லனுக்கு ஹஸ்கி வாய்ஸ்ல அவரே வாய்ஸ் ஓவர் கொடுக்கக் கூடாது. காதல் ஓ.கே. ஆனதும் தூரத்துல இருக்குற ஃபாரின் பசங்க ஓடிவந்து தலைகீழா ஆடி வித்தை காட்டக் கூடாது. இன்னொரு தடவை உங்க பட ஹீரோ மெக்கானிக்கல் இன்ஜினீயரா வந்தா, நாங்களே 'குயிக் சேஞ்ச் ஆப்ஷன்’ல அவரைப் பத்தாம் கிளாஸ் ஃபெயில் ஆக்கிருவோம்!

 'சாமி சத்தியமா இனி தெலுங்குப் படம் பார்க்க மாட்டேன்’னு 'ஜெயம்’ ராஜாகிட்ட சூடம் அணைச்சுச் சத்தியம் வாங்குங்க. அப்படியே தெரியாம பார்த் தாலும், உடனே அந்தப் படத்தோட ரைட்ஸை வாங்கி, தம்பி ஜெயம் ரவியை அதுல நடிக்கவெச்சு டப் அடிக்கக் கூடாது. டீலா... நோ டீலா?

 இந்த நூற்றாண்டு முழுக்க, ஊர்ல இருந்து விஜய் இனி சென்னைக்கு பஸ் ஏறக் கூடாது. அப்படியே பஸ் ஏறி கோயம் பேட்டில் இறங்கினாலும் சென்னை ரௌடிகளைப் பார்க்கக் கூடாது. பார்த்தாலும் அவர்களிடம் வம்பிழுத்து பஞ்ச் டயலாக் பேசக் கூடாது. முக்கியமா வில்லனோட ஹார்பர் மீட்டிங் நடத்தினா... நாங்க கடல்ல குதிச்சுடுவோம் சார்!

 இனிமே சந்தானம் இல்லாமதான் ராஜேஷ் படம் எடுக்கணும். டாஸ்மாக்ல வெச்சு சரக்குக் காமெடி வைக்கிறது, ஷகிலா ஜோக் வைக்கிறது தொடர்ந்தா, ஏழெட்டுக் கொலை விழும். பொண்ணுங்களைத் திட்டுற வசனமோ, பாட்டோ இருந்தா, மொத்த டீமும் வெள்ளை வேனுக்கு பேக்கப். ஆங்... அப்புறம் முக்கியமான விஷயம்... க்ளைமாக்ஸ்ல ஆர்யா - ஜீவானு முந்தின பட ஹீரோக்கள் கெஸ்ட் ரோல்ல வந்தா பொடனியில தட்டி பிடதியில் டிராப் பண்ணிருவோம்!

 சமுத்திரக்கனி படங்களில் பாடலோடு கூடிய கார் சேஸிங்குக்குத் தடா. ஹைபிட்ச்சில் ஷங்கர் மகாதேவனை அலறவிட்டு டாப் கியர் தட்டுனா, பாய்காட் பண்ணுங்க தமிழன்ஸ்!

 தாவணி போட்ட பொண்ணுங்க இன்னொரு தடவை தேரடி வீதியில ஆடுனா... வேணாம் லிங்கு சார்... அப்புறம் நாங்க அழுதுருவோம். ஊரே பயப்படுற ஒரு ரௌடியை சாமான்ய சாம்பார் ஒருத்தன் அடிச்சு பல்லைப் பேக்கும் கதைக்கு ஃபுல் ஸ்டாப் போடுங்க சார்!

 பாலாஜி சக்திவேல் யூனிட் இனிமேல் ஸ்கூல் யூனிஃபார்ம் ஹீரோயின்னு புள்ள புடிக்கக் கூடாது. இன்னொரு தபா அழுக்கு ஹீரோவைக் காமிச்சா, அவருக்கு பவர் ஸ்டார் தலைமை யில பவுடர் அடிக்கும் போராட்டம் நடத்து வோம். சொல்லிப்புட்டோம், ஆமா..!

 பாலா படங்களில் ஹீரோவுக்கு ஒட்ட முடி வெட்டி, மண்டைக்கு மருதாணி பூசி, 'ஒண்ணுக்குவிடத் தெரியாதவன்’, 'மணல் மணலாக் கக்கா போறவன்’ என்றெல்லாம் பில்ட்-அப் பிட் போடக் கூடாது. 'லைலாஃபோபியா’ கேரக்டரில் ஹீரோயின்களை லூஸுப் பெண்களாக்கக் கூடாது. முக்கியமா, விஆர்.எஸ். வாங்கி வீட்ல இருக்குற நடிகர்களைவெச்சு 'நியூட் ஷோ’ நடத்தக் கூடாது. மீறி நடிகர்களை நடிக்கவைக்கிறேன்னு சொல்லி வதைச்சா, 'நடிகர் வதை தடுப்புச் சட்டம்’ பாயும் பாஸ்!

 'விஜயைக் கேட்டேன்... அவர் நடிக் கலை. நானே நடிச்சேன்!’, 'ரஹ்மானைக் கேட்டேன்... அவர் மியூஸிக் போடலை. நானே போட்டேன்’. நிறுத்துங்க... எஸ்.ஜே.சூர்யா நிறுத்துங்க. போதும்... இதுக்கு மேல எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் இறங்காதீங்க. அப்புறம் சாவித்ரி, சரோஜா தேவி, பத்மினினு பேர்வெச்சு புது ஹீரோயின்களை அழைச்சுட்டு வந்து தொப்புள் போட்டோ ஷூட் வெச்சு எங்களை வயிறு எரியவிடாதீங்க!

 முந்திரிக்காடு, கேப்பைக் கூழ், நுங்கு, பலா, பம்பு செட் இதெல்லாம் இல்லாத பல்கேரியா பக்கத்துல உள்ள தீவுலதான் தங்கர் பச்சான் அடுத்த படத்தை எடுக்கணும்!

 பஸ், ரயில், ஃப்ளைட் எதுலயுமே கே.எஸ்.ரவிக்குமார் அண்ட் கோவுக்கு பொள்ளாச்சிக்கு டிக்கெட் கொடுக்கக் கூடாது. 'என்ரா சொல்றே... கட்றா வண்டிய’ வசனங்களை உங்க டிக்ஷனரில இருந்து டெலிட் பண்ணுங்க கே.எஸ்.ஆர்! 

 தேச நலனைக் கருத்தில்கொண்டு, இனி முருகதாஸ் படங்களில் தேச நலன் வசனங்கள் கூடவே கூடாது. க்ளைமாக்ஸ்ல சூறாவளி சுழல் காத்துச் சண்டைகள்... தப்பு தப்பு தப்பு!

 'ஏன்..?’, 'அவன்ட்டயே கேளு’, 'வருவான்...’, 'பேசாத’... இந்த லாண்டரி பில் டயலாக்குகள் இனிமேலும் மணிரத்னம் படங்களில் வேணுமா? அதுவும் அவர் படங்களில் கலெக்டர்ல இருந்து மீன்பாடி வண்டி ஓட்டுறவங்க வரை எல்லாரும் ஒரே டோன்ல பேசுறது... வேணாம்... நல்லா இல்லை!

 வசந்தபாலன் படங்களில் கசந்த வசனங்கள் இனிமே இருக்கக் கூடாது.  விளிம்பு நிலை மனிதர்களுக்குக் களிம்பு பூசுறதைக் கொஞ்ச வருஷத்துக்கு மறந்து ருங்க சாரே! பஞ்சம், பட்டினி, வேலை இல்லாத ஹீரோ, வலி, துயரம், தோல்வி அடைந்தவனின் சாதனைச் சரிதம்... இவை எல்லாம் அங்காடித் தெரு ஆடித் தள்ளு படிக்கு எக்ஸ்சேஞ்ச் பண்ணிடுங்க சார்! 

 இது மிகக் கடுமையான கண்டனம்... வத்தல் தொத்தல் ஹீரோவுக்கு செம கும் ஹீரோயின் காம்பினேஷன் இனிமேல் உங்க படத்தில் இருக்கவே கூடாது வெற்றி மாறன்ஜி!

 பார்ஸன் காம்ப்ளெக்ஸ், லேண்ட் மார்க், ஸ்பென்சர் போன்ற 'உலக சினிமா டி.வி.டி.’ ஏரியாக்களில் இயக்குநர் விஜய் நடமாடத் தடை விதிக்கணும்!

 இனியரு தடவை பாண்டிராஜ் படங்களில் சின்னப் பசங்க ஒரு ஃப்ரேம்ல வந்தாக்கூட அவர் மேல 'குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டம்’ பாயணும்னு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் யுவர் ஹானர்!

No comments:

Post a Comment