Sunday 10 June 2012

100 கோடி வசூலிக்குமா நான் ஈ?





    ஜூன் மாதம் 22 ஆம் தேதி அஜித் நடிப்பில் பில்லா இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது! ஆனால் அதற்கு ஒருவாரம் முன்னதாக ஜூன் 15-ஆம் தேதி மற்றொரு பிரமாண்ட படமாக ‘நான் ஈ’ ரிலீஸ் ஆகிறது! இந்தப் படத்துக்கு ‘யூ’ சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்தப் படத்தின் விரிவான முன்னோட்டம் 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக!

வழக்கமான மசாலா பாணியில் இல்லாமல் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட கதை. நாயகன் நானி, நாயகி சமந்தாவை உயிருக்கும் உயிராக காதலிக்கிறான். அதேநேரம் வில்லன் சுதிப்பும் சமந்தாவை ஒருதலையாக காதலிக்கிறான். ஒரு கட்டத்தில் சமந்தாவும் நானியும் காதலின் கவித்துவமான கணத்தில் இணைந்திருப்பதை பார்த்து மிருகமாகிறான் சுதிப்! சமந்தாவுக்கு தெரியாமல் நானியை அடித்துக் கொள்கிறான். இங்கேதான் எதிர்பாராத திருப்பம் நிகழ்ந்து, படத்தை அறிவியல் த்ரில்லராக மாற்றுகிறது

அந்தத் திருப்பம் வில்லனால் கொல்லப்படும் நாயகன் மறுஜென்மத்தில் ஈ ஆக பிறக்கிறான். சமந்தாவை காதலித்தது உட்பட தனது முற்பிறவி வாழ்க்கை அப்படியே அவனுக்கு நினைவில் உள்ளது. சுதீப் தன்னை கோடூரமாக அடித்துக் கொன்றது அவனை பழிதீர்க்கும் ‘சூப்பர் பவர் ஈயாக’ மாற்றுகிறது. இந்நிலையில் வில்லனை சித்ரவதை செய்து எப்படி பழி தீர்த்துக் கொள்கிறான் என்பதுதான் நான் ஈ படத்தின் திரைக்கதை.

இது கற்பனை கதையாக மட்டுமல்லாமல், அழுத்தமான காதலைச் சொல்லும் படமாகவும், நகைச்சுவையும் ஆக்‌ஷனும் நிறைந்த செமி சயின்ஸ் பிக்ஸன் த்ரில்லர் படமாக உருவாகியிருகிறது. இதில் சமந்தா – சந்தானம் இடையிலான காமெடி எபிசோட் தமிழ், தெலுங்கு ரசிகர்களுக்கு மிகபெரிய விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



நானி, சுதீப், சமந்தா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். தெலுங்கில் “மகதீரா”, “எமதொங்கா” ஆகிய படங்களை இயக்கிய டொலிவுட்டின் ஷங்கர் என அழைக்கப்படும் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியிருகிறார். மாகாதீராவுக்குப் பிறகு நேரடித் தமிழ்ப் படம் இயக்க வருமாறு சன் பிக்ஸர்ஸ் சார்பில் அழைக்கப்பட்டும், “ தமிழ்ரசிகர்களுக்கான கதை கிடைத்ததும் தமிழில் இயக்க விரும்புகிறேன்” என்று சொன்னவர், முதல் முறையாக தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தப் படத்தை நேரடியாக இயக்கியிருக்கிறார்.

ராஜமௌலியை மட்டுமே நம்பி, கன்னடம், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஹீரோவாக இருக்கும் சுதீப், இமேஜ் பற்றிக் கலவலைப்படாமல் இந்தப் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.

சுமார் 40 கோடியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கு தெலுங்கில் “ஈகா” என பெயரிட்டிருகிறார்கள். இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, போலந்து ஆகிய நான்கு நாடுகளில் படத்துக்கு ஸ்பெஷல் எஃபெக்ட் செய்யப்பட்டிருக்கிறது. மொத்த பட்ஜெட் ரூ.40 கோடி. இதில் 50 சதவீதம் விஷுவல் எபெக்ட்ஸுக்காக செலவு செய்யப்பட்டுள்ளது.


செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்தப்படத்துக்காக தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக ஸ்கார்பியோ கிரேனை பயன்படுத்தியிருகிறார்கள். ஹாலிவுட் ஆக்‌ஷன் படங்களில் அதிகமும் பயன்படுத்தபடும் கிரேன் இது. இந்தப் படம் தமிழ்நாட்டில் நல்ல விளம்பரம் பெற்றிருந்தாமும், பெரிய எதிர்பார்ப்பை இன்னும் ஏற்படுத்த வில்லை. இதற்குக் காரணம் படத்தின் இயக்குனர் ராஜமௌலியோ, அல்லது இந்தப் படத்தின் ஹீரோக்கள் நானி , சுதிப் ஆகிய இருவருமோ தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் அல்ல! சமந்தா சந்தானம் ஆகிய இரண்டு தெரிந்த முகங்கள் மட்டுமே ‘நான் ஈ’ படத்தை தமிழ்ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தாக வேண்டும்!

ஆனால் தெலுங்கில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படம் ஆந்திராவில் மட்டும் 75 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் தமிழ், மலையாளம், கன்னடம், படத்தின் உலக உரிமை ஆகியவற்றிமும் படம் வெளியான முதல் நான்கு வாரங்களுக்குள் 25 கோடி வசூலாகும் என்று தயாரிப்பாளர் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரெய்லர்


No comments:

Post a Comment