Wednesday 13 June 2012

கோ நடிகையை மேலும் உஷ்ணப்படுத்திய கோடை மழை…?!




சமீபத்தில் விஷால் படத்திலிருந்து விலகிய ராதாவின் கலையுலக வாரிசு கார்த்திகா, அடுத்து எஸ்.ஏ.சந்திரசேகரனின் ரீ-மேக்காக வெளிவர இருக்கும் சட்டம் ஒரு இருட்டறை படத்திலிருந்து சப்தம் இல்லாமல் எஸ்ஸாகிவிட்டாராம்!

இதற்கெல்லாம் காரணம் கோ நாயகியின் மா (அம்மா) தான் என்பதை எப்படியோ தெரிந்து கொண்ட ஒரு அனுபவஸ்தர், உங்க அம்மா காலம் வேற, உன் காலம் வேற… நீ இவ்வளவு பந்தா – டார்ச்சர் எல்லாம் கொடுத்தா இண்டஸ்ட்ரியில உன்னை யாரும் மதிக்கவே மாட்டாங்க… வாய்ப்புகள் வாயிற்படியோட திரும்பிபோயிடும்… என்று அட்வைஸ் மழை பொழிந்திருக்கிறாராம்!

அனுபவஸ்தரின் அட்வைஸ், கோடைமழை நடிகையை மேலும் சூடேற்றி விட்டதாம்! பாவம்!!

No comments:

Post a Comment