Monday 11 June 2012

அஜீத் மீண்டும் 'மங்காத்தா' லுக்!

'மங்காத்தா' படத்திற்கு கிடைத்த வரவேற்பை போலவே அப்படத்தில் அஜீத்தின் கெட்டப்பிற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

அஜீத் நடிப்பில் வெளியாக இருக்கும் 'பில்லா 2' படத்தில் அக்கெட்டப்பில் நடிக்கவில்லை.

அஜீத் - விஷ்ணுவர்தன் இணையும் படத்தில் அக்கெட்டப்பில் தான் நடித்து வருகிறார் அஜீத்.

அஜீத் , நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடித்து வரும் இப்படத்தில் இவர்கள் நால்வரது இணைப்பில் உள்ள காட்சிகளை அவசர அவசரமாக மும்பையில் படமாக்கி வருகிறார்கள்.

அஜீத்தை தவிர மீதி அனைவருமே வெவ்வேறு படங்களுக்கும் கால்ஷீட் கொடுத்துள்ளதால் தான் இந்த முடிவு. இது ஒரு துப்பறியும் கதையாம்.

இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார், வினோத் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். விஷ்ணுவர்தனின் கதைக்கு சுபா திரைக்கதை எழுதி இருக்கிறார்கள்.

இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது.

No comments:

Post a Comment