Tuesday 12 June 2012

இளைய தளபதியின் யோஹன் – ஆக்‌ஷன் படங்களில் ஒரு புதிய அனுபவம் – கௌதம்!


   இளையதளபதி விஜய் நடிக்க இருக்கும் ”யோஹன்” திரைப்படம் ஜுலை மாதம் முதல் துவங்குகிறது. ஆக்ஷன் படங்களில் ஒரு புதிய அனுபவத்தை இந்தப் படம் தரும் என்பது உறுதி என அப்படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.

”துப்பாக்கி”யை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் விஜய். இந் நிலையில் ”யோஹன்” தொடங்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் கவுதம் மேனன் தீராத முயற்சியில் விஜய் இன் கால்சீட்டை பெற்றுவிட்டார்.

வரும் ஜுலை மாதம் ”யோஹன்” படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளதாக இயக்குனர் தரப்பால் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இப் படம் தொடர்பில் இயக்குனர் கௌதம்…

யோஹன் படத்தில் நடிக்கும் ஒரே தமிழன் விஜய் எனவும், கதாநாயகி இந்திய பெண் என்றும், ஏனைய நடிகர் நடிகைகள் வெளிநாட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இப் படம் சர்வதேச தரத்துக்கு ஈடாக தயாரிக்கப்பட இருப்பதாகவும், ஆங்கில சப் டைட்டிலுடன் வெளியிடப்பட இருப்பதாக தெரிவித்துள்ள அவர், இப்படத்துக்கு AR ரஹுமான் இசையமைக்க உள்ளதாக தெரிவித்தார்.

யோஹன் திரைப்படம், ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் போல பாகம்1,2,3,….. என பல பாகங்களாக எடுக்கப்பட உள்தாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment