Thursday 14 June 2012

ராணாவில் இணையும் ஹன்ஷிகா?!





 குஷ்பூ, ஜோதிகா இல்லாத குறைய போக்கிக்கொண்டிருக்கும் ஹன்ஷிகா, தெலுங்கு பட வாய்ப்புகளுக்கு ஒட்டு மொத்தமாக டாட்டா சொல்லியிருக்கிறார்.

சிம்புவுடன் இரண்டு படங்கள், ஆர்யாவுடன் ஒரு படம், சூர்யாவுடன் ஒரு படம், அடுத்து விஷால் என்று எக்குத்தப்பாக படங்களை கையில் வைத்திருக்கும், இவர் மீண்டும் ரெட் ஜியாண்ட் நிறுவனத்துக்கு ஒரு படம் நடித்து தரவும் ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில் பிறகு எப்படி தெலுங்குப் படங்களுக்கு கால்ஷீட் தருவது?! அதுவுமில்லாமல் தற்போது தெலுங்கில் ஸ்ருதிஹாசன், சமந்தா, காஜல் அகர்வால், டாப்சி ஆகிய நால்வர் இடையே அங்கே பெரும் வாரே தொடங்கியிருப்பதால் கோலிவுட்தான் பாதுகாப்பு என்று முடிவெடுத்து விட்டார் ஹன்ஷிகா.

மற்றொரு பக்கம், தற்போது அணல் பறக்கும் தகவலாக நம் காதுகளை எட்டியிருக்கும் தகவல் ராணாவில் இரண்டாவது ரஜினிக்கு ஜோடியாக ஹன்ஷிகாவை ஒப்பந்தம் செய்யலாம் என்று டிஸ்கஸ் செய்து டிக் அடித்திருகிறார்களாம் ராணா இயக்குனர் ரவிகுமார் அலுவலகத்தில்! நவம்பரில் ராணா படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத்திலும், அதைத்தொடர்ந்து கேரளத்திலும், முன்றாவது கட்டப் படப்பிடிப்பை தஞ்சையை அடுத்த கங்கை கொண்ட சோழபுரத்திலும் நடத்துவது என்று திட்டமிட்டு வருவதாக நம்பகமான தகவல் நம் காதுகளை எட்டுகிறது!

இதற்கிடையில் சிங்கம் இரண்டாம் பாகம் படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க இருக்கும் ஹன்ஷிகா, தற்போது டெல்லி பெல்லி தமிழ்ரீமேக்கில் நடித்து முடித்ததும் அதிரடி வெயிட்லாஸ் செய்து தனது வயிற்றை ஒல்லி பெல்லி ஆக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் இயக்குனர் ஹரிக்காக! இதற்காக இப்போதே ஹரி ஒரு டயட்டீஸியனை ஹன்ஷிகாவுக்கு நியமித்து இருகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

No comments:

Post a Comment