Tuesday 12 June 2012

சகுனியுடன் பில்லா மோதுமா???? தள்ளி போகுமா??

   முதலில் ஜூலை மாதம் 6-ம் தேதிதான் கார்த்தி நடித்த சகுனி வெளியாகும் என்றார்கள். ஆனால் திடீரென ஜூன் 22-ம்தேதிக்கு மாற்றிவிட்டார்கள். இது அஜீத் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான்.காரணம், அன்றுதான் பில்லா 2 வெளியாகும் என்றார்கள்.தமிழ் சினிமாவில் இரு பெரிய படங்கள் ஒரே நாளில் வெளியானதெல்லாம் அந்தக் காலம். இன்றைக்கு அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. இரண்டு பெரிய படங்களுக்கிடையே இரு வார இடைவெளியாவது தேவைப்படுகிறது.காரணம், கிட்டத்தட்ட இருக்கிற அரங்குகளில் பாதியை பெரிய படம் எடுத்துக் கொள்வதால், சரியான இடைவெளியில் வெளியிடுவதே பாதுகாப்பானது என்ற நிலை உருவாகியிருப்பதுதான்.எனவே சகுனி வெளியாகும் தேதியில் பில்லா 2 வெளியாகுமா… தள்ளிப் போகுமா என்று கவலையுடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.நாளை மறுதினம் பில்லா 2 சென்சாருக்கு அனுப்பப்படும் என தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் அறிவித்திருந்தாலும், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் கொஞ்சம் தாமதமாகியிருப்பதால் பில்லா 2 தள்ளிப் போகலாம் என்கிறார்கள்.இதுகுறித்து சுனிர் கேட்டர்பால் கூறுகையில், “அஜீத்துடன் இணைந்து பில்லா 2 பார்த்தேன். ஆக்ஷன் படங்களில் புதிய சாதனையை பில்லா 2 நிகழ்த்தும். அடுத்த வாரம் சென்சார் முடிந்ததும், ரிலீஸ் தேதியை உறுதி செய்கிறோம். ரசிகர்களை ஏமாற்ற மாட்டோம்,” என்றார்.விநியோகஸ்தர்கள் மத்தியிலோ, பில்லா 2 வரும் ஜூன் 21-ம் தேதியே வெளியாகிவிடும் என்ற பேச்சு நிலவுகிறது. திரையரங்குகளும் முன்பதிவுக்கு தயாராகிவருகின்றன.

இவ்வளவு பெரிய படத்தின் வெளியீ்ட்டில், ஏன் கடைசி வரை இத்தனை இழுபறி…?

No comments:

Post a Comment