Monday 11 June 2012

என்னா வில்லத்தனம்!

தமிழ்நாட்டின் 'செல்லம்' பிரகாஷ்ராஜ் கூடிய விரைவில் இந்தி திரையுலகின் செல்லம் ஆகிவிடுவார் போலிருக்கிறது.

இந்தி திரையுலகில் தற்போது முக்கிய வில்லன் ஆகிவிட்டார் பிரகாஷ்ராஜ். ஹரி இயக்கத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடித்த 'சிங்கம்' படம் இந்தியில் ரீமேக்கானது.

அங்கும் 'சிங்கம்' என்ற பெயரிலேயே தயாரான அப்படத்தில், தமிழில் செய்த வில்லன் கதாபாத்திரத்தில் இந்தியிலும் பிரகாஷ் ராஜே நடித்தார். அப்படத்தில் சிறப்பாக நடித்ததிற்காக IIFA விழாவில் சிறந்த வில்லன் நடிகர் விருதினை வென்று இருக்கிறார் பிரகாஷ்ராஜ்.

தற்போது சல்மான் கான் நடித்து வரும் 'டபாங் 2' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அப்படத்திற்கு இப்போதே எதிர்ப்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது.

தமிழில் வரவேற்பை பெற்ற 'சாமி' படத்தினை கே.எஸ்.ரவிக்குமார் இந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறார். விக்ரம் ரோலில் சஞ்சய் தத் நடிக்க, கோட்டா சீனிவாசராவ் வேடத்தில் பிரகாஷ்ராஜ் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

இந்தியில் பிரகாஷ்ராஜின் வேகத்தை பார்த்தால் தமிழ் திரையுலகில் இனிமேல் தயாரிப்பில் மட்டுமே அவர் பெயர் வரும் போலிருக்கிறது.

No comments:

Post a Comment