Sunday 10 June 2012

இஃபா விருதுகள்: சிறந்த இந்தி இசையமைப்பாளர் ரஹ்மான்-வி்ல்லன் பிரகாஷ் ராஜ்!


   சிங்கப்பூரில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றார்.

சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா சிங்கப்பூரில் நடந்தது. இதில் இந்தி திரைப்படங்கள் திரையிடப்பட்டன. கமல் ஹாசனின் விஸ்வரூபம் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் இந்தி படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

ராக்ஸ்டார் மற்றும் ஜிந்தகி நா மிலேகி தோ பாரா ஆகிய இந்தி படங்கள் விருதுகளை அள்ளின. சிறந்த நடிகருக்கான விருதை ராக்ஸ்டார் படத்துக்காக ரன்பீர் கபூரும், சிறந்த நடிகைக்கான விருதை தி டர்ட்டி பிக்சருக்காக வித்யா பாலனும் பெற்றனர்.

சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ராக்ஸ்டார் படத்திற்கு இசையமைத்ததற்காக இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானுக்கு கிடைத்தது. மேலும் இந்தி சிங்கம் படத்தில் நடித்ததற்காக சிறந்த வில்லன் நடிகருக்கான விருது பிரகாஷ் ராஜுக்கு கிடைத்தது.

பிரியங்கா சோப்ராவின் தங்கை பரினீத்தி சோப்ராவுக்கு 2 விருதுகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment