Sunday 10 June 2012

கோச்சடையானுக்காக காத்திருக்கும் ஜப்பான் ரசிகர்கள்!



     சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோச்சடையான் படத்தைப் பார்க்க அவருடைய ஜப்பானிய ரசிகர்கள் பேராவலாக உள்ளனர்.ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்துள்ள கோச்சடையான் படப்பிடிப்பு முடிந்துவி்ட்டது. ஹாலிவுட் படமான அவதாரில் பயன்படுத்தப்பட்ட மோஷன் கேப்ச்சரிங் தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் வெளியாகும் முதல் 3டி படம் கோச்சடையான். இதற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை தந்துள்ளார்.
கோச்சடையானில் கெஸ்ட் ரோலில் ஐஸ்வர்யா ராய் வருகிறார் என்று சிலர் தகவல் பரப்பினர். ஆனால் அது உண்மை இல்லை என்று இயக்குனர் சௌந்தர்யா தெரிவித்துள்ளார்.இந்த படம் ஜப்பானிய மொழி மற்றும் ஆங்கிலத்திலும் டப் செய்து வெளியிடப்படுகிறது. ரஜினிக்கு ஜப்பானில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது அனைவருக்கும் தெரிந்ததே. அவர்களின் வசதிக்காகத்தான் ஜப்பானிய மொழியிலும் டப் செய்யப்படுகிறது.
இந்த தகவல் வெளியானதிலிருந்து கோச்சடையான் படத்தைப் பார்க்க ஜப்பானிய ரசிகர்கள் பேராவலாக உள்ளார்களாம். இந்தப் படத்தை வாங்கி வெளியிட ஆர்வமாக உள்ளதாக ஜப்பானில் உள்ள திரைப்பட விநியோக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment