Tuesday 12 June 2012

பில்லா 2 பார்த்த அஜீத்

ஜுன் 22 பில்லா 2 ரிலீஸ் என்று தயாரிப்பாளர் தரப்பு அறிவித்திருக்கிறது. ஆனாலும் படத்தின் சென்சார் முடிந்த பிறகே ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படும் என்று கடைசி நேரத்தில் ஒரு பிட்டை இணைத்திருக்கிறார்கள்.


பில்லா 2 முழுமையாக முடிவடைந்துவிட்டது. படத்தை அஜீத்துக்கு சனிக்கிழமை அன்று சென்னையில் திரையிட்டு காட்டினர். இதில் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனர் டோலட்டியும் கலந்து கொண்டனர். படம் அஜீத்துக்கு முழு திருப்தியை தந்திருப்பதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த வார இறுதியில் படம் சென்சார் செய்யப்படுகிறது. அதன் பிறகே ரிலீஸ் தேதி முடிவு செய்யப்படும் என்கிறார்கள். ஜுன் 22 என்பது ஒன்றிரண்டு நாட்கள் முன் பின்பாக மாற வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment