Thursday 14 June 2012

பில்லா2: ஆஸ்கார் ரவிச்சந்திரன் அதிரடி ப்ளான்


  பில்லா 2′ மற்றும் ‘சகுனி’ இரண்டு திரைப்படங்களுமே ஒரே நாளில் வெளியாகும் என்பது கிட்டதட்ட உறுதியாகி இருக்கிறது.

கார்த்தி நடிக்கும் ‘சகுனி’ திரைப்படத்தினை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு U சான்றிதழ் அளித்து இருக்கிறார்கள். ‘சகுனி’யின் தயாரிப்பாளரும் படம் 22ம் தேதி வெளியாகும் என்று உறுதி செய்து இருக்கிறார். ஜுன் 22 முதல் ‘சகுனி’ என்று நாளை முதல் விளம்பரப்படுத்த இருக்கிறார்கள். ‘சகுனி’ திரைப்படம் உலகம் முழுவதும் 800 திரையரங்குகளில் வெளியாகிறது.

அஜீத் நடிக்கும் ‘பில்லா 2′ படம் ஓரிரு நாட்களில் சென்சார் செய்யப்பட இருக்கிறது. சென்சார் முடிந்த உடன் ‘பில்லா 2′ படத்தினை வெளியிடும் ஆஸ்கர் ரவிச்சந்திரன், பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய்து ‘பில்லா 2′ காலண்டர் மற்றும் படத்தின் அடுத்த டிரெய்லரையும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்.

அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் ‘பில்லா 2′ படம் ‘சகுனி’க்கு ஒரு நாளுக்கு முன் ஜுன் 21ம் தேதி வெளியாகும் என்பது முடிவாகி இருக்கிறது. இவ்விரண்டு படங்களுக்கும் தியேட்டர்களை புக் செய்யும் பணி தீவிரமாகி உள்ளது. ஆஸ்கர் ரவிச்சந்திரன் ‘பில்லா 2′ படத்திற்காக முக்கிய திரையரங்குகள் அனைத்தையும் ஒப்பந்தம் செய்து இருக்கிறார்.

No comments:

Post a Comment