Thursday 14 June 2012

லவ் பண்ணலாமா.. சிம்பு சிங்கிள் ட்ராக்!

   தனது அப்பாவை போலவே நடிப்பு, இயக்கம், பாடல் எழுதுதல் என்று பல தளங்களில் இயங்குபவர் சிம்பு.

அவ்வப்போது தனது படங்களுக்கு பாடல்கள் எழுதுவதை வழக்கமாக வைத்து இருப்பவர் சிம்பு. இவரது பாடல்கள் இளைஞர்களை கவரும் வகையில் இருக்கும்.
இவர் எழுதிய பாடல்கள் அனைத்துமே இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று இருபப்து குறிப்பிடத்தக்கது.' வாடி வாடி க்யூட் பொண்டாட்டி', 'எவண்டி ஒன்ன பெத்தான்', 'லூஸுப் பெண்ணே' உள்ளிட்ட பாடல்கள் இதற்கு சான்று.

தற்போது இவர் நடிப்பில் வெளிவர இருக்கும் 'போடா போடி' படத்திற்கும் பாடல் ஒன்றை எழுதி இருக்கிறார். 'லவ் பண்ணலாமா வேண்டாமா' என்ற
இப்பாடல் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று இருக்கிறது. ஆனால் அது ROUGH CUT. தற்போது முழுமையான பாடலை மட்டும் SINGLE TRACKஆக இம்மாதத்தில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இப்பாடலின் இசை முடிவான உடன் 20 நிமிடங்களில் இப்பாடலை எழுதி முடித்து விட்டாராம் சிம்பு. எல்லாம் அப்பாவின் பயிற்சி தான் காரணம்!

No comments:

Post a Comment