Tuesday 12 June 2012

ஸ்ரீதேவியின் வேடம் தமன்னாவுக்கே கிடைத்தது. ஆத்திரத்தில் அனுஷ்கா? ஸ்ரீதேவியின் வேடம் தமன்னாவுக்கே கிடைத்தது. ஆத்திரத்தில் அனுஷ்கா?

    ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க அனுஷ்கா மற்றும் தமன்னா இடையே நடந்து வந்த போட்டியில் கடைசியாக அந்த வேடம் தமன்னாவுக்கே கிடைத்து இருக்கிறது. தென்னிந்திய சினிமாவை கலக்கிய நடிகை ஸ்ரீதேவிக்கு பாலிவுட்டில் பெரிய பிரேக் ஏற்படுத்தி கொடுத்த படம் ஹிம்மத்வாலா. ஜிதேந்திராவுடன் ஜோடி சேர்ந்து நடித்து இருந்தார் ஸ்ரீதேவி. இப்படம் சூப்பர்-டூப்பர் ஹிட்டானது.

இந்நிலையில் இப்படம் மீண்டும் இந்தியில் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது. இதில் ஹீரோவாக அஜய் தேவ்கன் நடிக்கிறார். ஹீரோயினாக பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் கத்ரீனா கைப், தீபிகா படுகோனே ஆகிய இருவரில் ஒருவர் நடிப்பார் என்று இருந்த நிலையில் தென்னிந்திய நடிகை ஒருவரை நடிக்க வைக்க டைரக்டர் எண்ணினார். இதற்காக தமன்னா மற்றும் அனுஷ்கா ஆகியோரது பெயர்கள் அடிபட்டன. அதேபோல் இருவரும் ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில் தமன்னா ஸ்ரீதேவி வேடத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மகிழ்ச்சி பொங்க கூறியுள்ள தமன்னா, ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க போகிறேன் என எண்ணும் போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படம் தொடர்பாக விரைவில் ஸ்ரீதேவியை சந்தித்து ஆலோசனைகள் பெறலாம் என எண்ணியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

ஸ்ரீதேவி வேடத்தை தன்னிடமிருந்து பறித்த தமன்னா மேல் அனுஷ்கா ஆத்திரத்தில் உள்ளதாக கோடம்பாக்கம் கிசுகிசுக்கிறது.

No comments:

Post a Comment