Thursday 14 June 2012

தளபதியுடன் தலைவி லட்சுமி ராய்!


 காஞ்சனா இயக்குனர், நடிகர் லாரன்ஸுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த லட்சுமி ராய் தற்போது அவரிடமிருந்து விலகிவிட்டாராம்.

லாரன்ஸ் இயக்கும் தெலுங்குப் படமான ரிபெல் படத்தில் லட்சுமிராயை போடுவதாக உறுதியளித்து பிறகு அவரை டீலில் விட்டதால், தற்போது இயக்குனர் விஜயுடன் இணக்கமாகி விட்டாராம் லட்சுமிராய்! ஆனால் மைனா நாயகியுடன் விவாகரத்து என்பதுவரை இல்லாததை எழுதிக்கொண்டிருக்கிறது மீடியா என்று விஜய் புலம்பித் தீர்க்க, அமலா அமைதியாக இருக்கிறார்.

உண்மையில் தற்போது விஜய்க்கும் - லட்சுமி ராய்க்கும்தான் நல்ல நட்பாம்! இதன் அடிப்படையிலேயே தாண்டவம் படத்தில் ராய்க்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் என்கிறார்கள். இந்த நட்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் லட்சுமிராய்க்கு நெருக்கமான பெண் உதவி இயக்குனர் என்கிறார்கள். இவர் தற்போது விஜயிடம் உதவியாளராகப் பணியாற்றுகிறாராம்.


தற்போது விக்ரமுடன் தாண்டவம் படத்தில் நடிக்க லண்டன் சென்ற லட்சுமிராய் அங்கே மழை கொட்டித்தீர்த்ததில் கடந்த பத்து நாட்களாக அறைகளிலேயே எல்லோரும் விழுந்து கிடந்து இருகிறார்கள், ஆனால் அலுக்காமல் அடாத மழையிலும் விடாமல் ஷப்பிங் கிளம்பிவிட்டதாம் இந்த ஜோடி!

தற்போதைய மிக சூடான செய்தியே, இயக்குனர் விஜய் இளையதளபதி விஜயை இயக்க இருக்கும் படத்திற்கு தலைவன் என்ற தலைப்பு கிடைக்காமல் போனாலும், விஜய்க்கு ஜோடியாக லட்சுமி ராய் கிடைத்திருகிறார். விஜய்க்கு ஜோடி ராய்தான் என்று பிடிவாதமாக தேர்வுசெய்திருக்கும் இயக்குனர் விஜய், விஜயையிடமும் இதற்கு அஃப்பீஸியலாக ஒகே வாங்கி விட்டாரம். விரைவில் இந்த செய்தி மீடியாவை கலக்கும் என்கிறார்கள். விஜய் படம் தொடங்கும் முன்பே ஒரு பாலிவுட் படத்தில் நடிக்கவும், தனது கிரிகெட் உலக நண்பர்களை வைத்து வாய்ப்பை பிடித்திருக்கிறாராம். அதற்கான அறிவிப்பும் விரைவில் வரும் என்கிறார்கள்! ராய் நினைத்தால் பல சாம்ராஜ்யங்கள் சரியும் போல தெரிகிறது!

No comments:

Post a Comment