Sunday 10 June 2012

சூர்யா சித்தார்த் தனுஷ் எல்லாருமே நல்ல நண்பர்கள்!

   ஸ்ருதிஹாசன். இந்த அளவுக்கு உற்சாகமாக ஸ்ருதியை இதற்கு முன் பார்த்திருக்க முடியாது. அவருடைய ஒவ்வொரு வார்த்தைகளிலும் வெடிக்கிறது ஆர்.டி.எக்ஸ். சந்தோஷம்.

”எதிர்பார்க்கவே இல்லாத சமயம் இப்படி ஒரு ஹிட்… எப்படி இருக்கு ஸ்ருதி?”

”அதுதான் சினிமாவோட பியூட்டி. இதுக்கு முன்னாடி நான் நடிச்ச சில படங்கள் சரியாப் போகலை. அப்போ கொஞ்சம் வருத்தமாத்தான் இருந்தது. ஆனா, அதுக்கு யாரையும் குற்றம் சொல்ல முடியாது. எந்த சினிமா ஓடும், எது ஓடாதுனு யாராலயும் சொல்ல முடியாது. உழைப்பைக் கொட்ட வேண்டியது மட்டும் தான் ஒரு ஆர்ட்டிஸ்ட்டோட கடமை. அதனால, ஒவ்வொரு படத்துக்கும் ஹண்ட்ரட் பெர்சன்ட் உழைச்சேன். அப்படித் தான் ‘கப்பார் சிங்’குக்கும் உழைச்சேன். இந்தப் பிரமாண்ட வெற்றி… என்ன சொல்றதுனு தெரியலை… ரொம்ப சந்தோஷம்! அப்பாவுக்கு இது ரொம்ப ரொம்ப சந்தோஷம். வெற்றியோ, தோல்வியோ எல்லாமே ஒரு அனுபவம்னு நினைப்பேன். தோல்வியை ஏத்துக்கிட்ட மாதிரி இந்த வெற்றியைக் கொண்டாடுறேன்!”



‘விஸ்வரூபம்’ படத்துல உங்க பங்கு என்ன?”

”எனக்கும் விஸ்வரூபத்துக்கும் துளி சம்பந்தம் கிடையாது. ஆனா, அப்பா படம் பத்தி நிறைய சொன்னார். கேட்கவே சர்ப்ரைஸா இருந்துச்சு. சில படங்களை அப்பா தனக்காகவும் சில படங்களை ரசிகர்களுக்காகவும் பண்ணுவார். ‘விஸ்வரூபம்’ ரெண்டு பேருக்குமான படமா இருக்கும்!”

”உங்களோட நடிச்ச ஹீரோக்களைப் பத்தி சம்திங் சம்திங் ஷேர் பண்ணிக்கலாமே?’
”சூர்யா… எங்க ஃபேமிலி ப்ரெண்ட். சினிமா, நடிப்பு, டெக்னாலஜினு அவ்வளவு விஷயங்கள் சொல்லிக்கொடுத்தார். அவர்கூட இருக்கும்போது, குடும்பத்துல ஒருத்தர் பக்கத்துல இருந்து கேர் எடுத்துக்கிற மாதிரி இருக்கும். சித்தார்த்… ஸ்க்ரீன்ல எனக்கு பக்கா ஃபிட். அதையும் தாண்டி எங்களுக்குள்ள நல்ல ஃப்ரெண்ட்ஷிப் இருக்கு. பெர்சனல் ஈக்குவேஷன்னு சொல்வாங்களே… அது சூப்பர்ப்பா இருக்கும். என்னைப் புரிஞ்சுக்கிட்டு விட்டுக்கொடுக்கிற நல்ல நண்பன். தனுஷ் ரொம்ப புரொஃபஷனல். நல்ல பெர்ஃபார்மர். இன்னைக்கு டிரெண்ட் செட்டர் அவர்தான். ஒரே வார்த்தையில் சொல்லணும்னா, எல்லாரும் எனக்கு நல்ல நண்பர்கள்!”

”நீங்க இப்படிச் சொல்றீங்க. ஆனா, சித்தார்த்தோட லிவிங் டுகெதர், தனுஷோட லவ்னு நிறைய சர்ச்சைகள் ரவுண்ட் அடிக்குதே?”

”என் மனசாட்சிக்கு என்னைத் தெரியும். சினிமாவில் என் லைஃப் ‘ஆக்ஷன்’, ‘கட்’ ரெண்டுக்கும் நடுவில் மட்டும்தான் இருக்கு. வேற எந்த பெர்சனல் லைஃபை யும் நான் இன்னும் செலெக்ட் பண்ணலை. நான் நினைச்சிருந்தா, ஃபாரின்ல படிச்சப்பவே காதலிச்சிருக்கலாம். இன்னைக்கு வரை அப்படி ஒரு எண்ணமே எனக்கு வரலை. அப்போ மியூஸிக்ல பிஸியா இருந்தேன். இப்போ ஷூட்டிங்ல பிஸியா இருக்கேன். அவ்வளவுதான்!”

”தனுஷ், ஸ்ருதி நெருக்கமா நடிச்ச காட்சிகளைப் பார்த்து டைரக்டர்ங்கிறதை மறந்துட்டு, மனைவியா ஐஸ்வர்யா டென்ஷன் ஆனாங்க. அதைத்தான் மீடியா பெருசுபடுத்திருச்சு’னு கஸ்தூரி ராஜா சொல்லியிருக்கார். ஐஸ்வர்யா அப்படி எதுவும் ஃபீல் பண்ணினாங்களா?”

”தனுஷ், ஐஸ்வர்யா ரெண்டு பேரும் கணவன், மனைவிங்கிறதைவிட, ஹீரோ, டைரக்டராத்தான் ஸ்பாட்ல நடந்துக்கிட்டாங்க. ’3’ படத்தில் நடிக்க நான் சம்மதிச்சதே ஸ்கூல் பொண்ணு, மனைவி, விதவைனு மூணு கேரக்டர்ல வெரைட்டி காட்டலாமேனுதான். ஐஸ்வர்யா எப்படி டைரக்ட் பண்ணுவாங்களோனு சந்தேகமா இருந்துச்சு. ஆனா, முதல் நாளே அவங்க நல்ல டைரக்டர்னு தெரிஞ்சுக்கிட்டேன். படத்துல நடிச்சப்ப, நான் ஜனனிங்கிற கேரக்டரா மட்டும்தான் ஃபீல் பண்ணேன். அவங்க என்னை ஸ்ருதியா பார்த்தாங்களா… அதனால டென்ஷன் ஆனாங்களானு எல்லாம் எனக்குத் தெரியாது!”

”இப்படி நிறைய சர்ச்சை வர்றதைப் பார்த்துட்டு அப்பா எதுவும் கேட்டாரா?”

”உங்களுக்கு நான் ஸ்ருதி… அவருக்கு நான் மகள். நீங்க என்னை நம்பாம இருக்கலாம். ஆனா, அவர் எப்படி நம்பாம இருப்பார்? யாரையும் காதலிச்சா, நானே அப்பாகிட்ட சொல்லிடுவேன். அதனால, அவர் இதைப்பத்தி ஒரு வார்த்தைகூடக் கேட்கலை. கேட்கவும் மாட்டார்!”

”ஸ்ருதிக்குப் பிடித்த ’3’ பிடிக்காத ’3’ என்னென்ன?”

”ஹார்டுவொர்க், திறமை, நேர்மை பிடிக்கும். டிராஃபிக், பொய், வெயில் பிடிக்காது!

No comments:

Post a Comment