Thursday 14 June 2012

சில்க் ஆனார் சனாகான்

மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் நிஜக்கதையான 'த டர்ட்டி பிக்சர்' இந்தியில் படமாக்கப்பட்டு வசூலை வாரிக் குவித்தது. இதில் நடித்த வித்யா பாலனுக்கு சிறந்த நடிகைக்கான இந்திய தேசிய விருதும் கிடைத்தது. தென்னிந்திய நடிகையான சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை தென்னிந்திய மொழிகளில் படமாக்கவில்லையே என்று பலரும் ஆதங்கம் தெரிவித்தனர்.


இதையடுத்து தமிழிலும், தெலுங்கிலும் சில்க்கின் வாழ்க்கையைப் படமாக்கும் முயற்சிகள் முழு வேகத்தில் தொடங்கின. ஆனால் இன்றுவரை அம்முயற்சிகள் எதுவும் கைகூடவில்லை. இந்நிலையில் மலையாளத்தில் சில்க் ஸ்மிதாவின் கதையைப் படமாக்குகிறார்கள்.

அனில் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். சில்க் ஸ்மிதாவை மலையாளத்தில் அறிமுகம் செய்தவர் அண்டோனி ஈஸ்ட்மென். இவர்தான் இப்புதிய படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையை எழுதப் போகிறார். இந்தப் பரபரப்பான படத்தின் நாயகியாக நடிக்கப் போவது சானாகான் தான்.

ஏன் தென்னிந்திய நடிகைகள் யாரும் கிடைக்கவில்லையா?

"அதற்குக் காரணம் இருக்கிறது. சில்க் ஸ்மிதா இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இருப்பினும் அவரது வேடத்தில் நடிக்க தென்னிந்திய நடிகைகள் பலரும் தயங்குகிறார்கள். வித்யா பாலனுக்கு உள்ள தைரியம் நம்ம நடிகைகளுக்கு இல்லை. அதனால்தான் சானா கானை தேர்வு செய்தோம். அவரும் விஷயத்தைச் சொன்ன உடனேயே நடிக்கச் சம்மதம் என உற்சாகத்துடன் சொன்னார்.

'சக்ஷல் ஷ்ரீமான் சத்துன்னி' என்ற மலையாளப் படத்தில் சில்க் ஸ்மிதா ஒரு பாடலுக்கு நடனமாடினார். அப்படத்தில் நானும் அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் உண்டு. அவர் மிக தைரியமான பெண். தன் மனதில் பட்டதை வெளிப்படையாகவும் தயக்கமின்றியும் பேசுவார். அவரது வேடத்தில் நடிக்கும் நடிகைக்கும் இத்தகைய குணாதிசயங்கள் இருக்க வேண்டும். அந்த வகையில் சானாகான் மிகப் பொருத்தமாக இருப்பார்" என்கிறார் இயக்குநர் அனில்.

No comments:

Post a Comment