Thursday 14 June 2012

வில்லனாக நடிக்கும் கார்த்தி


விரைவில் வெளியாக இருக்கும் 'சகுனி' படத்தில் நடித்திருக்கும் கார்த்தி, 'அலெக்ஸ் பாண்டியன்' படத்தில் நாயகி அனுஷ்காவுடன் இணைந்து நடிக்கிறார்.


இவர்களுடன் சந்தானம், நிகிதா, அனுஷா, மிலிந்த் சோமன், சுமன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

ஆந்திராவில் 'வசூல் நாயகனாக' கார்த்தி, தெலுங்கு பட கதாநாயகர்களை மிரட்டி வருகிறார்.

சுராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்தப்படத்தை 'பேட் பாய்' என்ற தலைப்பில் தெலுங்கில் வெளியிடுகிறார்கள்.

மங்காத்தா அஜித் மாதிரி ஒரு கதாப்பாத்திரத்தில் கார்த்தி நடிக்கிறார்.

அலெக்ஸ் பாண்டியன் படத்தில் புதிரான எதிர் நாயகனாக கார்த்தி, ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கப்போகிறார் என்று பட வட்டாரம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment