Tuesday 12 June 2012

நீயா நானா போட்டியில் சன் மற்றும் விஜய்?

   
  விஜய் நடித்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள துப்பாக்கிப் படத்தின் சேட்டிலைட் உரிமத்தைப் பெற பல்வேறு டிவி சேனல்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே விஜய் நடித்த நண்பன் படத்தின் சேட்டிலைட் உரிமையைப் பெற விஜய் டிவிக்கும், சன் டிவிக்கும் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டு அதில் விஜய் டிவி தான் வெற்றி பெற்றது. பெரும் தொகையை கொடுத்து இந்த போட்டியில் வெற்றி பெற்றது விஜய் டிவி.ஆனால் இம்முறை எந்த காரணத்திற்காகவும் துப்பாக்கி படத்தை விட்டுக் கொடுக்க சன் டிவி தயாராக இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன. இதனால் துப்பாக்கிப் படத்திற்கான சேட்டிலைட் உரிம விற்பனை நிச்சயம் சாதனை படைக்கும் என்று தெரிகிறது. யார் வாங்கினாலும் கல்லா கட்டப்போவது என்னவோ கலைப்புலி தானு தான்.

No comments:

Post a Comment